ரஜினியின் அடுத்த இயக்குனர் யார்?.. லிஸ்ட்டில் 3 பேர்... அவருக்குதான் வாய்ப்பு அதிகம்!..
இந்திய சினிமாவே ரஜினியை தலைவர் என அழைக்கிறது. சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் பல வருடங்களாக ரஜினியிடம் இருக்கிறது. கோலிவுட்டில் இப்போதும் இவருக்கான மாஸ் குறையவில்லை. 74 வயதிலும் இன்னமும் ஆக்டிவாக அதுவும் ஹீரோவாக நடித்து இருக்கிறார். 72 வயதில் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
இந்த படம் 650 கோடி வரை வசூல் செய்தது. லோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவிட்டு இப்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கூலி படம் வருகிற 14ம் தேதி 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2-வுக்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹெச்.வினோத் பெயர் அடிபட்டது. ஆனால். அவரோ அடுத்து தனுஷை இயக்கப்போகிறார் என செய்தி வெளியானது. ஒருபக்கம் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
அதன்பின் தெலுங்கு பட இயக்குனர் விவேக் ஆத்ரேயா பெயரும் அடிபட்டது. தற்போது சிறுத்தை சிவாவின் பெயரும் அடிபடுகிறது. அனேகமாக ரஜியின் அடுத்த படத்தை சிவா இயக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்தி ஓடுகிறது.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது சிவாவும், ரஜினியும் மீண்டும் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளது