இன்பநிதியை சினிமாவில் களமிறக்கும் உதயநிதி.. 3 பெரிய இயக்குனர்களுக்கு ஸ்கெட்ச்!..

By :  Murugan
Published On 2025-08-07 15:36 IST   |   Updated On 2025-08-07 15:36:00 IST

திரைத்துறையில் வசனகர்த்தா, கதாசிரியர், பாடலாசிரியர் என கலக்கியவர் கலைஞர் கருணாநிதி. இவரின் அனல் பறக்கும் வசனங்களை பேசி நடிகர்கள் கைத்தட்டல் வாங்கினார்கள். அவருக்கு பின்னர் அவரின் மகன் ஸ்டாலின் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் அவர் சினிமா பக்கம் அவர் சினிமாவுக்கு வரவில்லை.

ஆனால் அவரின் மகன் உதயநிதி சினிமாவில் ரெட்ஜெயண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் துவங்கி தயாரிப்பாளராக களமிறங்கினார். இவர் தயாரித்த முதல் திரைப்படம் குருவி. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் சூர்யா நடித்த ஏழாம் அறிவும், ஆதவன் உள்ளிட்ட பல படங்களையும் இந்நிறுவனம் தயாரித்தது. மேலும், புதிய படங்களை வாங்கி வினியோகம் செய்ய துவங்கியது.

ஒருகட்டத்தில் உதயநிதி சினிமாவில் நடிக்க துவங்கினார். ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பின் அடுத்த 3 வருடங்களுக்கு சினிமாவில் நடிக்கமாட்டேன் என கூறினார்.


தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதியை சினிமாவில் நடிக்கவைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மணிரத்னம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களிடம் பேசி வருகிறார்களாம். இன்பநிதி நிதி லண்டனில் நிர்வாகம் பற்றிய டிகிரி படித்தவர். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் நிதி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சினிமாவுக்கு போகவுள்ளதால் அதற்கு தேவையான பயிற்சிகளையும் எடுத்து வருகிறாராம்.

Tags:    

Similar News