தக் லைப் ஆடியே லான்ச்சை நிறுத்தி வைத்த கமல்ஹாசன்!.. சொன்ன காரணம்தான் ஹைலைட்!...

By :  MURUGAN
Update: 2025-05-09 07:31 GMT

36 வருடங்கள் கழித்து மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைப். ஏனெனில், நாயகன் படத்திற்கு பின் கமலும், மணிரத்னமும் இணையவே இல்லை. இந்த படத்தின் தலைப்பும், அறிவிப்பு வெளியானபோது வெளியிடப்பட்ட வீடியோவும் ரசிகர்களிடம் எதிர்பார்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் துல்கர் சல்மான்கான், ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதன்பின் அவர்கள் நடிக்கவில்லை. சிம்பு நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. எனவே, தக் லைப் பட கதையையே மணிரத்னம் மாற்றினார் எனவும் சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளர். கடந்த பல நாட்களாகவே இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கமல், சிம்பு, திரிஷா மற்றும் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.



நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில், படம் பற்றி பல கேள்விகளுக்கும் கமல்ஹாசனும், மணிரத்னமும் பதில் கூறினார்கள்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 16ம் தேது வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில், இந்த தேதியில் இது நடக்காது என கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.




 


எல்லையில் இந்தியாவும் - பாகிஸ்தானும் போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலையில் இந்த விழா நடக்காது எனவும், எப்போது நடக்கிறது என்கிற தேதி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் கமல் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags:    

Similar News