பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி!.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!...

Singer kalpana: 5 வயது முதல் பாடி வரும் பாடகி கல்பனா ராகவேந்தர். 2013ம் வருடத்திற்குள்ளே 1500 பாடல்களை பாடி முடித்திருந்தார். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரிகளில் பாடியிருக்கிறார். விஜய் டிவியில் பாட்டு பாடுவது தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொண்டார். ஸ்டார் சிங்கர் 5வது சீசனில் வீன்னராக இருந்தார். அதன்பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் ஜட்ஜாகவும் கலந்துகொண்டார். தமிழ் மட்டுமின்றை தெலுங்கு […]

;

Published On 2025-03-18 15:58 IST   |   Updated On 2025-03-18 15:58:00 IST

Singer kalpana: 5 வயது முதல் பாடி வரும் பாடகி கல்பனா ராகவேந்தர். 2013ம் வருடத்திற்குள்ளே 1500 பாடல்களை பாடி முடித்திருந்தார். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.

விஜய் டிவியில் பாட்டு பாடுவது தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொண்டார். ஸ்டார் சிங்கர் 5வது சீசனில் வீன்னராக இருந்தார். அதன்பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் ஜட்ஜாகவும் கலந்துகொண்டார். தமிழ் மட்டுமின்றை தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்திருக்கிறார். இவரின் குடும்பமே இசைக் குடும்பம்தான். இவரின் அப்பா ராகவேந்தர் பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

சிறு வயது முதலே கர்நாடக சங்கீதத்தையும் கல்பனா முறையாக கற்றுக்கொண்டார். சிறுமியாக இருந்த போது புன்னகை மன்னன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தும் இருக்கிறார். சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தில்தான் முதன் முதலில் பாட துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் பாடியிருக்கிறார்.

மாமன்னன் படத்தில் வந்த கொடி பறக்கு காலம் பாடல் கூட இவர் பாடியதுதான். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்நிலையில்தான், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2 நாட்களாக அவரின் வீடு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. அவரின் செல்போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, உறவினர்கள் காவல் நிலையத்தில் சொல்ல அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா மயங்கி கிடந்தது தெரிய வந்திருக்கிறது.

எனவே, கல்பனா இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் கணவர் சென்னையில் இருக்கும் நிலையில், அவரை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News