நாயகனை மீட் பண்ணாது!. பீட் பண்ணும்!.. தக் லைப் ஹைப் ஏத்தும் கமல்ஹாசன்....

By :  MURUGAN
Update: 2025-05-22 09:15 GMT

Thug life: கமல்ஹாசனும் மணிரத்னமும் நெருங்கிய உறவினர்கள். அதாவது கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினியைத்தான் மணிரத்னம் திருமணம் செய்தார். அதாவது மணிரத்னத்திற்கு கமல் சின்ன மாமனார். நாயகன் படம் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்தார்கள். அந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது.

மாற்று சினிமாவை விரும்பிய ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் கமலும் மணிரத்னமும் இணையவே இல்லை. இப்போது 38 வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து தக் லைப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், அபிராமி, நாசர், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியது. ஏனெனில், மணிரத்னம் ஸ்டைலில் ஒரு பக்கா ஆக்சன் படமாக தக் லைப் உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது.


எனவே, இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஊடகங்களுக்கும் தொடர் பேட்டி கொடுத்து வருகிறார்கள். தக் லைப் படத்தின் கதை பற்றி பேசிய மணிரத்னம் ‘இந்த படம் நாயகன் படம் போல இருக்கக் கூடாது என முடிவெடுத்தோம்.

அதே ஜானரில் இருந்தாலும் வேறு மாதிரி ஃபீல் பண்ணனும். எனக்கொரு ஐடியா இருந்தது. அது கமல் சாரிடம் சொன்னபோது அது செலவு அதிகம் என்றார். அதன்பின் அவர் ஒரு கதை சொன்னார். அதில் ஒரு விஷயம் எனக்கு பிடித்திருந்தது. அது நாயகனில் இருந்து கிளம்பிய பொறி என்றும் சொல்லலாம்’ என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், ‘இந்த படம் நாயகன் போல இருக்குமா?’ என கமலிடம் கேட்டதற்கு ‘நாயகனை மீட் பண்ணுமா என்பதை விட நாயகனை இப்படம் பீட் பண்ண வேண்டும் என்றே முதலில் முடிவெடுத்தோம். அதுதான் முக்கியம்’ என பதில் சொல்லியிருக்கிறார் கமல்.

Tags:    

Similar News