கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் நிரூபிச்சிட்டாங்க... ஆனா இதுல மன அழுத்தம்... நாசர் என்ன சொல்றாரு?
தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த நாசர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...
நாயகன் படத்துல தான் முதன் முதலாக கமல், மணிரத்னம் சாருடன் இணைகிறேன். அவங்க இரண்டு பேருமே 38 வருஷம் கழிச்சி மீண்டும் நான் இணைவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அது இல்லாமலேயே இந்தப் படம் தமிழ்சினிமாவிலேயே முக்கியமான படமாக இருக்கப் போகுது. ஏன்னா மணிசார் அறியப்படுவது நாயகன் படத்தால. அது ஒரு வெற்றிகரமான படம் மட்டுமல்ல. கல்ட் பிலிமாக இருந்தது. அதே மாதிரி கமல் சார் அவரது நடிப்பைப் பற்றி சொல்லவே வேணாம்.
பல்வேறு பரிமாணங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தன்னை வெளிப்படுத்துகிறார். இரண்டு பேருமே சேர்ந்துருக்காங்க. ரகுமான் சார் எல்லாரும் கிடைக்காதா என ஆசைப்பட்ட போது 2 ஆஸ்கர் விருது வாங்கிருக்காரு.
ஆக இந்த 3 பேருமே படத்தில் இருக்காங்க. அதுல பெரிய மன அழுத்தம் அவங்களுக்கே இருக்கு. போட்டி என்பது அவங்களுக்கு வேற ஒருத்தர் இல்ல. அவங்களுக்குப் போட்டி அவங்களே. 3 பேருமே நிரூபிச்சிட்டாங்க. அதை விட பெரிசா போகணும்னு உழைச்சிருக்காங்க.
இந்தப் படத்துக்கு சூட்டிங் போற மாதிரி எங்களுக்குத் தெரியல. பெரிய ஸ்டார், பெரிய டைரக்டர்னு தோரணையே இல்லை. அப்போது தான் நாங்க எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லாம வேலை செய்தோம். அது அற்புதமான நேரம். உங்களைப் போலவே நானும் ஒரு குழந்தை மாதிரி இந்தப் படத்துக்குக் காத்துக்கிட்டு இருக்கேன். போருக்குப் போற மாதிரி இருக்கு என்று தெரிவித்துள்ளார் நாசர்.
கமல் படங்கள் என்றாலே நாசர் தவறாமல் இடம்பிடிப்பார். நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி என பல படங்களைச் சொல்லலாம். அப்படித்தான் இந்தப் படத்திலும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.