மேடையில் வைத்து ஜெயம் ரவியை கிண்டலடித்த எஸ்கே!.. தீயாய் பரவும் வைரல் வீடியோ..!
பட்டிமன்றம் மேடையில் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவியை மிமிக்ரி செய்து கிண்டல் செய்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் விஜய் டிவி மூலமாக ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்-ஆக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். தனது திறமையின் மூலமாக ஒவ்வொரு படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். தமிழ் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது ஹீரோ வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து மக்களுக்கு பிடித்த வகையில் படங்களை கொடுத்து தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகராக மாறி இருக்கின்றார். அதிலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றார் சிவகார்த்திகேயன்.
இவர் நடித்த படங்களிலேயே எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை அமரன் திரைப்படம் செய்து வருகின்றது. இதனால் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றனர். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற திரைப்படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
ஆனால் அதற்கு முன்னதாக சுதா கொங்குரா இயக்கத்தில் எஸ்கே 25 திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்து இருப்பார் போல.. இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். முதலில் ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டியதாகவும், அதன் பிறகு சில கண்டிஷன்கள் போட்டு இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்-ஆக பணியாற்றி வந்த காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்தவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அப்படி என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஈகோவும் பார்க்காமல் ஜெயம் ரவி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகின்றது.
நேற்று படத்தின் பூஜை வெளியானதை தொடர்ந்து பலரும் சமூக வலைதள பக்கங்களில் சில வீடியோக்களை வைரலாகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து கொண்டிருக்கின்றார். ஜெயம் ரவி அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வார் என்பதை சிவகார்த்திகேயன் கிண்டலாக மிமிக்ரி செய்து அந்த மேடையில் பேசியிருப்பார்.
அந்த வீடியோவை தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் வைரலாகி வருகிறார்கள். வளர்ச்சி அப்படி என்றால் என்ன என்பதை நிச்சயம் சிவகார்த்திகேயனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.