வாட்டர்மிலன் ஸ்டார் திவாரை கலாய்க்கிறாரா சூர்யா?!. கருப்பு படத்தில் கஜினி சீன் ரீகிரியேட்!...

By :  MURUGAN
Published On 2025-07-23 11:36 IST   |   Updated On 2025-07-23 11:36:00 IST

Suriya karuppu: தற்போதெல்லாம் எல்லோரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. சினிமாவில் நுழைய முடியாத பலரும் ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தங்களின் திறமையை காட்ட ஏதேதோ செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு அடித்தளம் போட்டது டிக்டாக் ஆப்தான்.

அந்த ஆப்பில் ஜிபி முத்து, திருச்சி சாதனா, ரவுடி சூர்யா ஆகியோர் தொடர்ந்து வீடியோ போட்டு பிரபலமானார்கள். பெரும்பாலும் சினிமா பாடலுக்கு நடனமாடியோ அல்லது காட்சிகளில் அந்த நடிகர்களை போல நடித்து ரீல்ஸ் வீடியோக்களை போட்டார்கள். அதில், கொஞ்சம் ஆபாசமும் இருந்தது. இதன் மூலம் அவர்கள் பணமும் சம்பாதீத்தார்கள்.

அதில் சிலருக்கு சினிமாவில் வாய்ப்பும் கிடைத்தது. அதோடு, யுடியூப்பில் அந்த வீடியோக்களை நிறைய பேர் பார்ப்பதால் அதில் வரும் விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. சாதாரண மரக்கடை வைத்திருந்த ஜிபி முத்து சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கி செட்டில் ஆகிவிட்டார். எனவே, பலரும் அது போல நாமும் வரவேண்டும் என்கிற ஆசையில் சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.


அதில் திவாகரும் ஒருவர். இவர் சிவாஜி உள்ளிட்ட நடிகர்களை போல நடித்துக்காட்டுகிறேன் என சொல்லி முகத்தை அஷ்டகோணலாக வைத்து கண்றாவியான ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார். அது சிறந்த நடிப்பு என அவரே சொல்லிக்கொள்வார். எனவே, இவரை பலரும் ட்ரோல் செய்வதுண்டு. ஆனால், அதையெல்லாம் திவாகர் கண்டுகொள்வது இல்லை. இத்தனைக்கும் இவர் ஒரு மருத்துவரும் கூட.

கஜினி படத்தில் தர்புசணியை சாப்பிட்டுகொண்டே தங்களின் உதவியாளர்களை கண்ணாலேயே சைகை காட்டி சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை எங்கு போனாலும் சுதாகர் நடித்து காட்டி ‘வாட்டர்மிலன் ஸ்டார்’ என தானே தனக்கு பட்டம் கொடுத்துக்கொண்டார். இந்நிலையில்தான் கருப்பு படத்தில் கஜினி படத்தில் வரும் அந்த காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.


அனேகமாக தன்னால்தான் அந்த காட்சி பிரபலமாகியிருக்கிறது. அதனால்தான் சூர்யாவே மீண்டும் அப்படி ஒரு காட்சியில் நடித்திருக்கிறர் என வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Tags:    

Similar News