பாக்கத்தான் அப்பாவி! சித்தா, DNA படங்களை தவிர நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டிய படங்கள்

By :  Rohini
Published On 2025-07-29 12:16 IST   |   Updated On 2025-07-29 12:16:00 IST

nimisha

யாருய்யா இந்த பொண்ணு என்று சித்தா படத்தை பார்த்த பிறகு ஆச்சரியப்பட வைத்தவர் நடிகை நிமிஷா சஜயன். பார்ப்பதற்கு என்னவோ பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம். ஆனால் நடிப்பில் இவர் பட்டையை கிளப்பி வருகிறார். தமிழில் சித்தா, DNA போன்ற படங்களில் இவரின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை. ஆனால் இந்த இரு படங்களை தாண்டி மலையாளத்தில் பல படங்களில் நிமிஷா தன்னுடைய நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தொண்டுமுதலும் திரிக்சாக்‌ஷியும் என்ற படத்தில் பகத் பாசிலுக்கு இணையான நடிப்பை வழங்கியிருப்பார் நிமிஷா சஜயன். திருமணமாகி தாலி செயினை திருடன் பறித்துக் கொண்டு போக மீண்டும் அந்த திருடன் கிட்ட இருந்து வாங்க போலீஸ் ஸ்டேசன்ல நிமிஷா சஜயன் அலைகிற ஒவ்வொரு காட்சியும் பிரம்மாதப்படுத்தியிருப்பார். அடுத்ததாக ஒரு குப்ரசித்தா பையன்.

இந்தப் படத்தில் ஒரு ஹன்னா என்ற பெயரில் அட்வகேட்டாக நடித்திருப்பார் நிமிஷா. இதில் ஹன்னாவின் பயம், பதட்டம் ஆனாலும் உறுதியான மனசு என நிமிஷா எல்லாவற்றையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். நீதிமன்றத்தில் இவருடைய திக்கும் பேச்சு உணர்ச்சி என ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். இதனால்தான் கேரளா ஸ்டேட் அவார்டு கூட இவரால் வாங்க முடிந்தது.

அடுத்ததாக சோழா திரைப்படம். இந்த படத்தில் 16 வயது மதிக்கத்தக்க ஒரு பள்ளி பொண்ணாக நிமிஷா நடித்திருப்பார். கேரளாவில் தன் அம்மாவுடன் வாழும் நிமிஷா ஒரு பையனை காதலிச்சு அவனோடு ஓடிப் போகிறார். அதிலிருந்து அவருடைய அப்பாவித்தனம், பயம், நடிப்பு என மிகவும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியிருப்பார் நிமிஷா சஜயன்.

அடுத்து தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தில் புதுமணப்பெண்ணாக புகுந்துவீட்டுக்குள் நுழையும் நிமிஷா.கிட்சன்ல அடைஞ்சு, வீட்டு வேலை, கணவனின் ஆணாதிக்கம் என எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. கடைசியில் பொங்கி எழுந்து புகுந்து வீட்டை விட்டே வெளியேறும் போது அவருடைய நடிப்பு மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது.

அடுத்ததாக மாலிக் திரைப்படம். இந்தப் படத்தில் ரோஸலின் கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருப்பார். கடற்கரை கிராமத்தில் வாழ்பவள்.கணவரோடு சமூக நீதி போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனாலு குடும்ப பிரச்சினைகள், மத மோதல்கள் என இவருக்கு அழுத்தங்களை தருகின்றன. இந்தப் படத்திலும் இவரின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை பார்க்க முடிந்தது.

Tags:    

Similar News