தளபதி ஷூட்டிங்கில் மணிரத்தினத்துக்கே ஷாக் கொடுத்த ரஜினி!. இவ்வளவு நடந்திருக்கா!,,,

By :  Murugan
Update: 2024-12-21 03:00 GMT

rajini

Rajinikanth: ரஜினி என்னதான் சூப்பர்ஸ்டார் என்றாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் இயக்குனர் என்ன சொல்கிறாரே அதை செய்துவிட்டு போய்விடுவார். இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டார். அதேபோல், பல நடிகர்களை போல படப்பிடிப்பில் பந்தாவெல்லாம் செய்ய மாட்டார்.

மிகவும் எளிமையாக இருப்பார். நடிகர் விஜயெல்லாம் ஷாட் முடிந்தவுடன் கேரவேனுக்கு போய்விடுவார். ஆனால், ரஜினி அப்படி இல்லை. ஓரமாக ஒரு மரத்தின் கீழ் ஒரு பிளாஷ்டிக் சேரில் அமர்ந்திருப்பார். அல்லது சக நடிகர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அதேபோல், பெரிய நடிகர்களுக்கு உணவு ஸ்பெஷலாக நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து வரும்.

ஆனால், ரஜினி அதையெல்லாம் சாப்பிடமாட்டார். மிகவும் எளிமையான உணவையே அவர் சாப்பிடுவார். தனது 50 வருட திரை வாழ்வில் இதுவரை இயக்குனரிடமோ, தயாரிப்பாளரிடமோ ரஜினி சண்டை போட்டது இல்லை. மேலும், மனஸ்தாபமும் ஏற்பட்டது இல்லை.


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே திரைப்படம் தளபதி. இப்போதுவரை ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரஜினி படமாக தளபதி இருக்கிறது. மகாபாரதத்தில் வந்த கர்ணன் - துரியோதனன் இடையே இருந்த நட்பை மையமாக வைத்து இப்படத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தார்.

ரஜினி என்றாலே ஸ்டைல்தான். ஆனால், இந்த படத்தில் ரஜினியை புதுவிதமாக நடிக்க வைத்திருந்தார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினியே இதை சொல்லி இருக்கிறார். இந்நிலையில், அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகை சோபனா ஒரு முக்கிய தகவலை ஒரு டிவி நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார்.


அந்த படத்தில் நானும், ரஜினியும் நடிக்கும் ஒரு காட்சி மலை மீது எடுக்கப்பட்டது. கீழேயிருந்து மேலே ஏறித்தான் போக வேண்டும். நாளை காலை 4 மணிக்கு அங்கு போக வேண்டும் என மணிரத்னம் சொல்ல ரஜினியோ ‘அந்த நேரத்திற்கு எப்படி அந்த இடத்திற்கு என்னால் வர முடியும்?’. என தயங்கினார். ‘படக்குழுவில் இருக்கும் 100 பேர் அங்கே வருவார்கள். அவர்கள் வரும்போது உங்களால் வரமுடியாதா?’ என மணிரத்னம் கேட்டார்.

அதன்பின் எல்லோரும் எங்களின் அறைக்கு சென்றுவிட்டோம். அடுத்தநாள் அதிகாலை நாங்கள் எல்லோரும் மலையேறி அங்கு சென்றோம். அந்த இடத்தில் சிகரெட் வெளிச்சம் தெரிந்தது. யாரென பார்த்தால் அது ரஜினி. எங்களுக்கு முன்பு ரஜினி அங்கே போயிருந்தார். மணிரத்னத்திடம் ‘டைரக்டர் சார். நான் வரமாட்டேன்னு நினைச்சீங்க இல்ல. இப்ப பாருங்க வந்துட்டேன்’ என சொன்னார். அவர் ஒரு சூப்பர் மேன்’ என ஷோபனா சொல்லி இருக்கிறார்.


Tags:    

Similar News