என்னது இவங்கதான் புதிய நயன்தாராவா? போற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு
15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தனக்கு கொடுக்கப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை சமீபத்தில் தான் வேண்டாம் என ஒரு அறிக்கை மூலமாக அறிவித்து இருந்தார். அதற்கு முன்பாகவே அந்த பட்டத்தால் தனக்கு வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
யாரெல்லாம் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என கூறுகிறார்களோ அந்த கமெண்டில் 10 பேர் பெருமையாக பேசினால் 50 பேர் திட்டி பேசுறாங்க. ஒருவேளை ஒரு பெண்ணாக இருப்பதனால் அவர்களுக்கு இந்த பட்டத்தை கொடுக்க விருப்பம் இல்லையோ என்னவோ என்பது போல பேசி இருந்தார். இருந்தாலும் இந்த பட்டத்திற்காக நான் பயணிக்கவில்லை. என்னுடைய நடிப்பு என்னுடைய கேரியர் இது மட்டுமே தான் என்னுடைய முழு ஃபோக்கஸ் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் .
அவர் சொல்வதைப் போல சமீப காலமாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அதுவும் திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே நடித்து வருகிறார் .இப்போது கூட மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை முடிந்து படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கின்றது.
அதில் லீட் ரோலில் நடிக்க போறது நயன்தாரா தான். ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல ஒரு வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறது. சுந்தர் சி சினிமா கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகப் போகும் திரைப்படமும் இதுதான்.
இந்த படம் மட்டும் எதிர்பார்ப்பையும் மீறி வெற்றி அடைந்தால் சுந்தர் சி மற்றும் நயந்தாரா இருவருக்குமே ஒரு பெரிய ஹைப்பை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக போற இடமெல்லாம் அதிக வரவேற்பை வாங்கும் நடிகை என்றால் அது கயாடு லோகர். கிட்டத்தட்ட அடுத்த நயன்தாரா என்பதைப் போல ரசிகர்கள் இவரை பார்த்து வருகின்றனர்.
அதுவும் டிராகன் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் ரீச் ஆகி இருந்தது. கிளாமர் மற்றும் நடிப்பு இரண்டையும் கலந்து அந்த படத்தில் அவர் கொடுத்தது ஒரு பிளஸ் என்று சொல்லலாம். அமுல் பேபி மாதிரி தளதளவென இருக்கும் அவருடைய தோற்றம் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. டிராகன் படத்தின் வெற்றியால் இன்று பல ஊர்களுக்கு கல்லூரிகளுக்கு சென்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார். எங்கு போனாலும் அவருடைய பெயரை தான் அனைவரும் உச்சரித்து வருகிறார்கள். அதனால் புதிய நயந்தாரா இவர்தான் என ஒரு கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு இனி அடுத்தடுத்த படங்களில் கயாடு லோஹரை காணலாம்.