மீண்டும் ரேஸுக்கு போகும் அஜித்!.. 5 மாச கால்ஷீட் தனுஷுக்கா? ஆதிக் ரவிசந்திரனுக்கா?!...
Ajithkumar: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித் குமார். சினிமாவில் நடிப்பது தொழில் என்றாலும் கார் ரேஸில் கலந்துகொள்வது, பைக்கில் உலகை சுற்றி வருவது என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்ள போனார்.
அஜித்தின் டீமுக்கு அவர்தான் கேப்டனாக இருக்கிறார். துபாய் ரேஸில் அஜித்தின் டீம் 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலாகியது. துபாய் ரேஸை முடித்துவிட்டு ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் ரேஸுக்கு போய்விட்டார் அஜித்.
இந்த மாதம் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து அவர் கார் ரேஸில் இருப்பார். ஒருபக்கம் விடாமுயற்சி படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதற்கு காரணம் அஜித் ஆசைப்பட்டதை மகிழ் திருமேனி அப்படியே எடுத்து கொடுத்ததுதான். ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே அந்த டீசர் வீடியோவில் இருந்தது. பாக்கா கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்குகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், 'குட் பேட் அக்லி ஹிட் அடித்தால் மீண்டும் உன் இயக்கத்தில் நான் ஒரு படம் நடிக்கிறேன்' என ஆதிக்கிடம் அஜித் சொல்லியிருக்கிறார். இந்த வருடம் நவம்பர் முதல் 2026 மார்ச் மாதம் வரை மட்டுமே அடுத்த படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டுள்ளார். ஏனெனில், 2026 ஏப்ரல் மாதம் முதல் அவர் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
எனவே, அந்த 5 மாத கால்ஷீட்டை அவர் யாருக்கு கொடுப்பார் என தெரியவில்லை. விடாமுயற்சி படம் தோல்வி என்பதல் மகிழ் திருமேனிக்கே மீண்டும் படம் கொடுப்பாரா என்பதும் தெரியவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது தனுஷா?.. ஆதிக் ரவிச்சந்திரனா?.. மகிழ் திருமேனியா? என்பது இந்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.