கதையை கேட்டாலே காது கூசுதே!.. அதுக்குத்தான் சீமானா?.. விக்னேஷ் சிவனின் வில்லங்க கதை தெரியுமா?..
Love Insurance Kompany: விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை கசிந்து தற்போது சமூக வலைத்தளத்தில் கிசுகிசுப்புகளை கிளப்பி இருக்கிறது.
இயக்குனராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் போடா போடி. படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் இன்றளவு அப்படத்தின் பாடல்கள் செம ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் ரவுடித்தான் படத்தினை இயக்கினார். படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் அடித்தது. வசூல் குவித்து அவருக்கும் சினிமாவில் அடையாளத்தை பெற்று தந்தது.
அதுமட்டுமல்லாமல் நயனின் கணவராக கூட புரோமோஷன் கொடுத்ததும் இப்படம் தான். இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் நானும் ரவுடித்தான் படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனது.
விக்னேஷ் சிவனுக்கும் பெரிய அளவில் படங்கள் இல்லாமல் போனது. அதையடுத்து சில வருட இடைவேளைக்கு பின்னர் விஜய் சேதுபதி, நயன் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கினார்.
பாடல்களை அனிருத் இசையமைத்து இருக்க மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் படம் மீண்டும் மண்ணை கவ்வியது. அதையடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருவரின் சந்திப்பு நடந்தாலும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை எதுவுமே அஜித்துக்கு பிடிக்காமல் போக படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்தே பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை எடுத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில் தற்போது படத்தின் கதை கசிந்து இருக்கிறது. அதாவது 10 வருட டைம் டிராவல் செய்யும் போது மகன் மற்றும் அப்பா இருவரும் ஒரே கால் கேர்ளை காதலிப்பது தான் கதையாக இருக்கிறதாம்.
அதிலும் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருக்கும் பிரபல அரசியல் தலைவரும், இயக்குனருமான சீமான் தான் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த கதை உண்மையானால் விக்னேஷ் சிவன் அடுத்த ரவுண்ட் அடி வாங்க போறார் என்ற பேச்சு அடிப்பட்டு வருகிறது.