கைதி 2 படத்தில் கார்த்தியின் அந்த படத்தில் நடித்த நடிகை ஹீரோயினா?.. தரமான சம்பவம் தான்!..

கைதி 2 படத்தின் கதாநாயகியாக அனுஷ்கா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

By :  SARANYA
Published On 2025-06-12 17:15 IST   |   Updated On 2025-06-12 17:15:00 IST

இயக்குனர் லோகேஷ் கணகராஜ் கூலி படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கானுடன் இணைந்து ஒரு சூப்பர் ஹிரோ படம் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கும் நடிகையை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் லோகேஷ் கணகராஜ் இயக்கியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்திய கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.


கூலி படம் அமீர் கானின் அடுத்த படத்தில் லோகேஷ் கணகராஜுடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தின் கூலி படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு கைதி 2, விக்ரம் 2 என தொடர்ந்து படங்களை இயக்க உள்ள நிலையில் அமீர் கானின் படத்தை தொடங்க தாமதமாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், லோகேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய நிலையில் அஜித் குமாருடன் இணையும் கூட்டணிக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி கூட்டணியில் கைதி 2 படத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்காவின் உடல் எடை காரணமாக பட வாய்ப்புகளை இழந்து வந்த நிலையில் காட்டி, கைதி 2 என தொடர்ந்து நடிக்க உள்ளார் என்கின்றனர். அலெக்ஸ் பாண்டியன் படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ளார் அனுஷ்கா என்றும் எல்சியூவில் அனுஷ்கா இணையப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

Tags:    

Similar News