விஜய் - திரிஷா உறவு!.. முக்கிய அப்டேட் கொடுக்கும் பயில்வான் ரங்கநாதன்!....

By :  Murugan
Update: 2024-12-18 02:21 GMT

விஜய் trisha

Vijay Trisha : தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வருபவர் விஜய். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் இவர். தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். துவக்கத்தில் இவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. அதன்பின் பூவே உனக்காக படம் இவரை எல்லோரிடமும் பிரபலமாக்கியது.

அதன்பின் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தார். இவரின் படங்கள் நல்ல வசூலை பெறவே இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர் காத்திருந்தார்கள். இப்போது 200 கோடி சம்பளம் வாங்குமளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார்.

vijay

விஜய் லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். முன்பெல்லாம் விஜயின் புது படங்கள் தொடர்பான விழாக்களில் விஜயின் மனைவி சங்கீதா கலந்து கொள்வார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரை அப்படி பார்க்க முடிவதில்லை.

லண்டனில் தந்தையின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் சங்கீதா. விஜயும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. அதேநேரம், திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக இருக்கிறார். இருவரும் கில்லி, ஆதி, திருப்பாச்சி, வில்லு, லியோ போன்ற படங்களில் இணைத்து நடித்தார்கள்.


விஜயுடன் திரிஷா சுற்றும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாவதுண்டு. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் - திரிஷா தனி விமானத்தில் ஒன்றாக சென்றார்கள். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து டிவிட்டரில் #Justiceforsangeetha என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் வந்தது.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ‘திரிஷா விஜயை சுற்றி வருவது போல்தான் தெரிகிறது. ஆனால், அவரை விஜய் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என நினைக்கிறேன். ஏனெனில், விஜய்க்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். அரசியல் கட்சியை வேறு துவங்கி இருக்கிறார். எனவே, மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அதை செய்ய மாட்டார்’ என கூறியிருக்கிறார்.

அதேநேரம், தன்னைப்பற்றிய செய்தியோ, புகைப்படங்களோ வெளிவருவதில் மிகவும் கவனமாக இருக்கும் விஜய் திரிஷா தொடர்பான புகைப்படங்களை வெளியாகும் விஷயத்தில் அப்படி இல்லை என்பதை பார்க்கும்போது 'எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும்' என நினைப்பதாகவே தெரிகிறது எனவும் ஒரு பக்கம் சினிமா பத்திரிக்கையாளர்கள் பேச துவங்கிவிட்டனர்.

Tags:    

Similar News