கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்துட்டாரே!.. விஜய்க்கே விபூதி!.. கலாய்த்த புளூ சட்டை மாறன்!

By :  ROHINI
Published On 2025-06-23 13:16 IST   |   Updated On 2025-06-23 13:16:00 IST

bluesattaimaran

சமீபத்தில் விஜய் பற்றிய கேள்விக்கு நடிகை மமிதா பைஜூ சொன்ன ஒரு பதில் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றனர். விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று விஜயின் பிறந்தநாள் என்பதால் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக் குழு விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இந்த படத்தில் விஜய் போலீஸ் கெட்டப்பில் வருகிறார். படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி பாபி தியோல் என முக்கிய கதாபாத்திரங்களில் இவர்கள் நடித்துள்ளனர். இதில் நடிகை மமிதா பைஜூவுக்கும் நேற்றுதான் பிறந்தநாள். அவருக்கும் சேர்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மமீதா பைஜூ ஒரு பேட்டியில் விஜயை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் ரொம்பவே பண்பாக இருப்பார். அவருக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். எப்பொழுதுமே கூலாகத்தான் இருப்பார். அதோடு அமைதியாகவும் இருப்பார் என கூறியிருந்தார். இதில் மேலும் விஜய் பற்றி கூறிய மமிதா பைஜூ ‘இதுதான் உங்களுக்கு கடைசி படமா’ என நான் விஜய்யிடம் கேட்டேன். அதற்கு விஜய் ‘ எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் அது தெரியும்’ என்று கூறியதாக மமீதா பைஜூ தெரிவித்திருந்தார்.

இந்த ஒரு தகவல் தான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றன. விஜயின் கடைசி படமாக தான் ஜனநாயகன் திரைப்படம் இருக்கும் என அனைவருமே நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்து தான் இது அவருடைய கடைசி படமா இல்லையா என்பது நமக்கு தெரியும்.

bluesattaimaran

 ஆகவே 2026 தேர்தல் வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டியது அவசியம். விஜய் பற்றி சொன்ன இந்த விஷயத்தை வைத்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல அவருடைய எக்ஸ் தல பக்கத்தில் அவருக்கே உரிய பாணியில் கலாய்த்து அந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இப்போது வைரலாகி வருகின்றன.

Tags:    

Similar News