பாலிவுட்டில் வில்லனாகும் யாஷ்… சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

யாஷ் நடிப்பில் உருவாகும் படத்தின் சம்பளம்

By :  Akhilan
Update: 2024-12-27 11:00 GMT

yash

Yash: பிரபல நடிகர் யாஷ் பாலிவுட் வில்லனாக நடிக்கும் படத்திற்கு அவர் வாங்க இருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் இருந்து கன்னட சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் யாஷ். சின்ன சின்ன வருடங்கள் நடித்து வந்தாலும் அவர் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது.

சினிமாவில் அவருடைய கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. கன்னட நடிகரிலிருந்து தென்னிந்தியா நடிகராக உச்சம் பெற்றார். தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகம் இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்தது.

இரண்டாம் பாகம் வெளியாகி பல மாதங்கள் கடந்தும் யாஷ் நடிப்பில் அடுத்த திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தேவையில்லாத கதைகளில் நடித்து இருக்கும் பெயரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்வு செய்யும் திரைப்படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். அடுத்த ஆண்டு இறுதியில் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது. அதற்கு முன்னர் தற்போது யாஷ் ராமாயணம் திரைப்படத்தில் இணைய இருக்கிறார்.

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகம் மிகப்பெரிய அளவில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறது. தற்போது இதை ஸ்கெட்ச்சை பாலிவுட் திரை உலகமும் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் ராமாயணம் படத்தை பல மொழிகளில் இயக்க முடிவெடுத்து இருக்கின்றனர்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தாலும், முதற்கட்ட வேலைகளை படத்தின் இயக்குனர் நிதீஷ் திவாரி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதா வேடத்தில் சாய்பல்லவியும், ராவணன் வேடத்தில் யாஷும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் யாஷ் ராவணனாக நடிக்க அவருக்கு 200 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். இது ஹீரோவாக நடிக்கும் ரன்பீர் கபூரை விட அதிகம் என கூறப்படுகிறது.

Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

Tags:    

Similar News