அங்கே தக் லைஃப் ஓடலைன்னா இங்கே ஜனநாயகனுக்கு ஆப்பு... இதெல்லாம் நியாயமா?
ஜெய்லர், லியோ ஆகிய படங்களின் வசூலையும் தாண்டி தக் லைஃப் 700 கோடியை அடிக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
இன்ஸ்டாவிலும் புரொமோ பண்றதுக்கான வேலைகளைக் கமல் செய்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ், சேட்டிலைட் உரிமைகளை பெரிய அளவில் கமலும், மணிரத்னமும் இணைந்து விற்றுள்ளார்கள். 8 வாரத்துக்குப் பிறகுதான் படம் ஓடிடியில் வருவதால் நார்த்ல எல்லா மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் தக் லைஃப் வெளியாக உள்ளது.
அங்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் கண்டிப்பாக இது பான் இண்டியா படமாக மாறும். சிம்புவுக்கான ரசிகர்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தக் லைஃப் படத்தைக் கர்நாடகாவுல ஓட விடலன்னா ஜனநாயகன் படத்தை எங்கேயும் தமிழகத்துல ஓட விட மாட்டோம்னு வருது. என்னய்யா இது?
தக் லைஃப் கமல் படம். கன்னடத்தைப் பத்திப் பேசினாரு. அது பஞ்சாயத்து ஆனது. ஜனநாயகன் என்ன பண்ணுச்சுன்னா புரொடியூசர் அங்கே உள்ள கேவிஎன் நிறுவனம். இது தீர்வே ஆகாது. பழிக்குப் பழி. குத்துக்கு குத்து. இது எந்த விதத்துல நியாயம்? ஜனநாயகன் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளப்போகுது.
இந்தப் படத்தைத் தடை பண்ணினா நியாயமே கிடையாது. அது நமக்குத் தான் அசிங்கம். கேவிஎன் புரொடக்ஷன் வேற ஒரு கம்பெனிக்கு கைமாத்தி விட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? அதனால அதெல்லாம் நியாயமே கிடையாது. கமலுக்கு மன்னிப்பு கேட்க கெடு வேற கொடுக்குறாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல கேட்பீங்களான்னு. நிச்சயமா கமல் மன்னிப்பு கேட்கவே மாட்டாரு. கேட்காம இருக்குறதுதான் அவரோட கட்ஸ். நிச்சயமாக இந்தப் படம் மிகப்பெரிய வசூல் ரீதியான படமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்