ED ரெய்டுல தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு... அதிகம் பாதிக்கப்படுவது அவரா?
சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு அதிகளவில் பணம் கொடுத்ததன்பேரில் இந்த நடிகர்கள் இடி வளையத்துக்குள் வந்துள்ளனர். ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவானார். இந்த நிலையில் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர் யார்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைச் சொல்கிறார். பார்க்கலாமா..
பராசக்தி படத்துக்கு 1 மாசமா சூட்டிங் நடக்கல. இது தொடர்ந்து நடக்காது. அதற்கான வாய்ப்புகள் இருக்காது. விசாரணை இருப்பதால் பணப்பரிமாற்றம் இருக்காது. பராசக்தி படத்துக்கு மட்டும் 75 கோடி சம்பளம். அது போக ரிலீஸ்சுக்குப் பிறகு படத்தோட பிராஃபிட் ஷேர்னு பேசிருக்காங்க.
இந்த ரைடுல அதிகமா பாதிக்கப்படுவது யாருன்னா சிவகார்த்திகேயன். அவர் தான் தன்னை அடுத்தடுத்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு. அவர் முதல்ல காமெடி நடிகராகத்தான் எல்லாருக்கும் தெரிஞ்சது. அமரன் படத்து சக்சஸ்சுக்கு அப்புறம் அவர் பெரிய ஆக்ஷன் ஹீரோவா ஆகிட்டாரு. அதே பாதையிலதான் போகணும்னு நினைக்கிறாரு.
விஜய் இடத்தை அடைய அவர் முயற்சி பண்றாரு. அந்தக் கனவுகளில் சுத்திக்கிட்டு இருக்காரு. இது உண்மைதான். அப்படிப் பார்க்கும்போது பராசக்தி அவருக்கு ஒரு நல்ல படம். சுதா கொங்கரா நல்ல ஒரு டைரக்டர். தரமான தயாரிப்பு நிறுவனம். நிச்சயமா இது நல்லா வரும்னு சிவகார்த்திகேயன் எதிர்பார்க்கிறார். புறநானூறு சூர்யா நடிக்க வேண்டிய படம். அவரு வேணாம்னு விட்டுட்டாரு.
இது ஒரு பான் இண்டியா படம். இந்தி எதிர்ப்பு பற்றியது. இது தமிழகத்துல போகஸ் பண்ணின கதை. இதுல நடிச்சா பான் இண்டியா ஸ்டார் ஆக முடியாது. மும்பையில ஜோதிகா செட்டில் ஆகிட்டாரு. அதனால வேணாம்னுட்டாரு. இந்தக் கதையில தனுஷ் நடிக்கணும்னு போட்டி போட்டாரு. அதே நேரத்துல சிவகார்த்திகேயன் போட்டி போட்டு பிடிச்சிட்டாரு. முருகதாஸின் மதராஸியும் நல்லா வந்துருக்குன்னு சொல்றாங்க.
இந்த மாதிரி இடி ரெய்டு வரும்போது படத்துக்கு சிக்கலாகத் தான் வரும். விஜயின் ரசிகர்கள் கொண்டாட்டமாகி விட்டார்கள். விஜய் சிவகார்த்திகேயனுக்குத் துப்பாக்கிக் கொடுத்தாரு. ஆனா அவரே விஜய்க்கு எதிரா படத்தை ரிலீஸ் பண்றாரு. இப்போ அந்தப் படத்துக்கு சிக்கல். அதனால ஜனநாயகன் சோலோவாகத் தான் வரும்னு கொண்டாட்டத்துல இருக்காங்க.
விஜய் வசூலை முழுமையா பெறக்கூடாது. அப்படிங்கறதுக்காகத் தான் பராசக்தியைப் போட்டியா ரிலீஸ் ஆக்குறாங்க. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண வேணாமேன்னு சொல்லிருக்கலாம். ஆனா அவரு சொல்லவே இல்லை. இவரது சமீபத்திய நடவடிக்கைகள் வேற லெவல்ல இருக்கு. அரசியல் பார்வை இவருக்கும் வந்துவிட்டதோ என்ற மாதிரி தான் இருக்கு. தனுஷ், சிம்புவுக்கு அடுத்தடுத்து லைன் அப் இருக்கு. அதனால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.