அந்த பொண்ண நான் அடிச்சனா.. என்ன நடந்துச்சு?.. பேட்டியில் ஓபனாக சொன்ன பாலா..!
இயக்குனர் பாலா: தமிழ் சினிமாவில் பாலாவின் திரைப்படங்கள் என்றாலே அது நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வெற்றி படமாக மாற்றக்கூடிய இயக்குனர் பாலா. இவர் மொத்தம் 8 திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இதில் பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் கடைசியாக இயக்கிய தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படங்கள் தான் தோல்வியை சந்தித்தது. அதிலும் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் சில பல காரணங்களால் வெளியாகவில்லை.
இப்படத்திற்கு பிறகு தான் நடிகர் விக்ரமுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தனர். பல வருடத்திற்கு பிறகு இயக்குனர் பாலா வணங்கான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கின்றது.
இந்த திரைப்படத்தை முதலில் நடிகர் சூர்யாவை வைத்து எடுத்து வந்தார் இயக்குனர் பாலா. ஆனால் சில பல காரணங்களால் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதை தொடர்ந்து நடிகர் அருண் விஜயை வைத்து இப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார். வணங்கான் திரைப்படம் பாலாவிற்கு ஒரு சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வணங்கான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பாலா பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.
அந்த வகையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த பாலா பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். தனது முதல் திரைப்படம் தொடங்கி தற்போது வரை சினிமாவில் தான் சந்தித்த ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையுமே பகிர்ந்திருந்தார். அந்த வகையில் வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகை மமிதா பைஜூ நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.
மலையாளத்தில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த பிரேமலு திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர்தான் மமிதா பைஜூ. இவர் முதலில் வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அந்த படத்தில் இருந்து பின்னர் திடீரென்று விலகிவிட்டார். அவர் விலகியதற்கு காரணம் பாலா அவரை அடித்து விட்டார் என்று சமூக வலைதள பக்கங்களில் கூறி வந்தார்கள்.
இது குறித்து இயக்குனர் பாலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது 'அவர் என்னுடைய பொண்ணு மாதிரி. சின்ன பொண்ணு போய் அதுவும் பொம்பள பிள்ளையை யாராவது அடிப்பாங்களா? மும்பையில் இருந்து வந்த ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மமிதாவுக்கு மேக்கப் போட்டுவிட்டார். எனக்கு மேக்கப் பிடிக்காது என்பது அவருக்கு தெரியும். நான் ஷார்ட் ரெடி என்று கூறியவுடன் அவர் மேக்கப் போட்டு வந்து நின்றார். என்னமா இது மேக்கப் போட்டுட்டு வந்து நின்றுக்க என்று அவரிடம் கேட்டு கையை மட்டும் தான் ஓங்கினேன். உடனே நான் அந்த பெண்ணை அடித்து விட்டேன் என்று கூறிவிட்டார்கள்' என விளக்கம் அளித்து இருக்கின்றார்.