கங்குவா, ரெட்ரோ நிலைமை என்னாச்சு பாத்தீங்களா? பதிலடி கொடுத்த சூர்யா பட இயக்குனர்
surya
இயக்குனர் பாண்டிராஜ் தலைவன் தலைவி பட வெற்றிக்கு பிறகு பல விஷயங்களை நேர்காணலில் கூறி வருகிறார்கள். குறிப்பாக சூர்யாவை வைத்து அவர் எடுத்த எதற்கும் துணிந்தவன் படத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என்ன என்பதையும் பற்றியும் விளக்கமாக பேசியிருக்கிறார். இதோ அவர் கூறியது:
எல்லா ஹீரோக்களுக்கும் ஹிட் கொடுத்துட்டு எங்க சூர்யா அண்ணனுக்கு ப்ளாப் கொடுத்திட்டீயேனு அந்த சமயத்தில் எல்லாரும் கேட்டாங்க. எதற்கும் துணிந்தவன் படத்துக்குத்தான் மூன்று வருஷம் வேலை பார்த்தேன். ஏனெனில் கொரானா காலகட்டம். அந்தப் படத்துக்குத்தான் அதிகமா வேலை பார்த்தோம். அதிகமா உழைத்தோம். அமையுறதுனு ஒன்னு இருக்கு. சூர்யாவுக்கு கொஞ்சமா வேலை பார்க்கணும்,
மற்ற ஹீரோக்களுக்கு அதிகமா வேலை பார்க்கணும்னு இல்ல. சொல்லப்போனால் கடைக்குட்டி சிங்கத்தை விட இந்தப் படம் ஹிட்டாகணும். தம்பிக்கு ஒரு ஹிட்டை கொடுத்தாச்சு. அண்ணனுக்கும் ஒரு ஹிட் கொடுக்கணும்னுதான் உழைச்சோம். ஏதோ ஒரு விதத்தில் அது அமையாம போய் விட்டது.அதை நான்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். தப்பு பண்ணியிருக்கிறோம்னு நான் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் உழைக்கலனு சொல்லக் கூடாது. கொரானா காலகட்டத்துல் அப்படி பயங்கரமா அந்தப் படத்துக்காக உழைச்சோம். உயிரை பற்றி கவலைப்படாமல் கஷ்டப்பட்டு உழைச்சோம்.என் தயாரிப்பாளரை பொறுத்தவரைக்கும் பயங்கரமாக ஹேப்பி. ஹீரோவை பொறுத்தவரைக்கும் அவருக்கும் ஹேப்பி. கலெக்ஷன் ரீதியாக ஒரு நம்பர் இல்லைங்கிறது எல்லாருக்கும் ஒரு வருத்தம்.
அதுக்கப்புறம் வந்த ரெண்டு படங்கள் கூட எதற்கும் துணிந்தவன் படத்தை தாண்டவில்லை. அதுதான் உண்மை. யார்கிட்ட வேணும்னாலும் கேளுங்க. எதற்கும் துணிந்தவன் கலெக்ஷனை அடுத்த படங்கள் தொடவில்லை என பாண்டிராஜ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். உடனே நெட்டிசன்கள் பாண்டிராஜ் சொன்ன அந்தப் படங்கள் கங்குவா மற்றும் ரெட்ரோ படத்தைத்தான் என கூறி வருகிறார்கள்.
et
சொல்லப்போனால் சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஒரு மாஸ் வெற்றி என எந்தப் படங்களும் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு பெரிய வெற்றிக்காக சூர்யாவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியின் கருப்பு படத்திற்காக அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.