வேள்பாரியில் நடிக்கும் ஹீரோக்கள்!. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டரே ஷங்கர்!..

By :  Murugan
Update: 2024-12-19 12:27 GMT

shankar

Velpari Movie: ஜென்டில்மேன் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டதால் தொடர்ந்து மெகா பெட்ஜெட் படங்களை இயக்க துவங்கினார். பிரபுதேவாவை வைத்து காதலன் படத்தை இயக்கினார். தொடர்ந்து ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், பாய்ஸ், முதல்வன் என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இவர்.

இவர் இயக்கிய இந்தியன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், அர்ஜூனை வைத்து இவர் எடுத்த முதல்வன் படமும் பேசப்பட்டது. விக்ரமை வைத்து அந்நியன், ஐ போன்ற படங்களை இயக்கினார். இப்படி அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி இந்தியாவின் முக்கிய இயக்குனராக ஷங்கர் மாறினார்.

ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.ஓ என 3 திரைப்படங்கள இயக்கியிருக்கிறார். விஜயை வைத்து நண்பன் படத்தையும் இயக்கினார். கமலை வைத்து இவர் இயக்கிய இந்தியன் 2 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளிவந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.


எனவே, எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் போகவில்லை. இது ஷங்கரை அப்செட் ஆக்கினாலும் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்த இயக்கியுள்ளார். கடந்த 2 வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியது போல் எஸ்.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்க ஆசைப்படுகிறார் ஷங்கர். பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் கதையை ஏற்கனவே அவர் எழுதி முடித்துவிட்டார்.


சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஷங்கர் ‘வேள்பாரி படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் திடகாத்திரமாக, வீரர்கள் போல கம்பீரமாக இருக்க வேண்டும். மேலும், பெரிய பட்ஜெட்டை தாங்கக்கூடிய நடிகர்கள் வேண்டும். இப்போது யாராவது உடம்பை நன்றாக வைத்திருக்கும் புகைப்படங்களை பார்த்தால், அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து சேர்த்து வைத்து வருகிறேன். எல்லாம் உறுதியான பின் உங்களுக்கு சொல்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை பலரும் முயன்றும் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அதில் பல முன்னணி நடிகர்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும். எல்லோரையும் ஒருங்கிணைத்து படத்தை உருவாக்க வேண்டும். மணிரத்னமே பலமுறை முயன்று தோற்றுப்போனார். இறுதியில்தான் அவர் வென்றார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என பலரும் அப்படத்தில் நடித்திருந்தனர். அதுபோல, ஷங்கர் எதிர்பார்ர்ப்பது போல ஹீரோக்கள் அவருக்கு கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே வேள் பாரி நாவல் படமாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி அடிக்கடி பார்க்கும் 3 திரைப்படங்கள் இதுதானாம்!.. அட இது அவரே சொன்னது!..

Tags:    

Similar News