தோல்வியா! எனக்கா!.. பொல்லாதவன் தொடங்கி விடுதலை 2 வரை.. கெத்து காட்டிய 'வெற்றி'மாறன்..!

By :  Ramya
Update: 2024-12-20 11:19 GMT

vetrimaran 

இயக்குனர் வெற்றிமாறன்: தனது பெயரிலேயே வெற்றி என்கின்ற அடையாளத்துடன் இருக்கும் வெற்றிமாறன் தான் இயக்கிய படங்களிலும் வெற்றியை கொடுத்து வருகின்றார். தான் இயக்கிய ஏழு திரைப்படங்களில் ஒரு திரைப்படம் கூட தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது. அப்படி இவர் இயக்கிய பொல்லாதவன் திரைப்படம் தொடங்கி விடுதலை 2 திரைப்படம் வரை வெற்றி படங்களாக கொடுத்து இதுவரை தோல்வியை கண்டிராத ஒரு இயக்குனராக வலம் வருகின்றார்.


பொல்லாதவன்:

இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட வைரங்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். உதவி இயக்குனராக இருந்து பொல்லாதவன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2007 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் பொல்லாதவன். அந்த சமயத்தில் நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் மற்றும் சூர்யாவின் வேல் ஆகிய படங்கள் வெளியான போதிலும் அந்த இரண்டு படங்களை காட்டிலும் பொல்லாதவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

ஆடுகளம்: பொல்லாதவன் திரைப்படத்தை அடுத்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் நடித்த திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவராக மாறினார் வெற்றிமாறன்.

விசாரணை: ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விசாரணை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் அட்டகத்தி தினேஷ் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப்படமும் பல விருதுகளையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் நாமினேஷன் வரை சென்றது.

வடசென்னை : 2018 ஆம் ஆண்டு மீண்டும் நடிகர் தனுஷை வைத்து வடசென்னை என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷின் ஆஸ்தான இயக்குனரானார் வெற்றிமாறன். இவர் தனுசை வைத்து இயக்கிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதேபோல்தான் வடசென்னை திரைப்படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அசுரன்: வடசென்னை திரைப்படத்தை முடித்த கையோடு வடசென்னை 2 திரைப்படத்தை தான் தனுஷை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசுரன் என்கின்ற வித்தியாசமான திரைப்படத்தை 2019 ஆம் ஆண்டு இயக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருப்பார் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

விடுதலை: காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சூரியை ஹீரோவாக மாற்றி அழகு பார்த்தார் வெற்றிமாறன். கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி போலீஸ்கதா பாத்திரத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதற்கு முழு காரணமும் வெற்றிமாறனையே சேரும்.

விடுதலை 2: விடுதலை திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வந்தார் வெற்றிமாறன். கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு இன்று உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றது. ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.


இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படமும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி பொல்லாதவன் தொடங்கி விடுதலை 2 வரை தான் இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றி படங்களாகவே கொடுத்திருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.

அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்காக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனுக்காக அவரின் படத்திற்காக திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் அளவிற்கு அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.

Also Read: வேள்பாரியில் நடிக்கும் ஹீரோக்கள்!. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டரே ஷங்கர்!.. 

Tags:    

Similar News