டிஎன்ஏ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு
டிஎன்ஏ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு;
By : Cine Reporter
Published On 2025-06-05 11:57 IST | Updated On 2025-06-05 11:57:00 IST
அதர்வா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டிஎன்ஏ . சித்தா புகழ் நிமிஷா நாயகியாக நடிக்கும் இப்படம் க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகி உள்ளது. ம்ேலும் இப்படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சாஹி சிவா மற்றும் அனல் ஆகாஷ் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் வெற்றி படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படம் வெற்றிக்காக போராடி வரும் அதர்வாவுக்கு கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற 20ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.