கேம் சேஞ்சருக்கு விழுந்தது க்ரீன் சிக்னல்... போலாம் ரைட்...!
ஷங்கரின் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படம் பொங்கல் தினத்தையொட்டி வெள்ளித்திரைகளில் வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் இந்தப் படத்தின் மூலமாக அதற்குப் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்சரணின் நடிப்பில் வெளிவரும் இந்தப் படம் முதல்வன், இந்தியன், ஜென்டில்மேன் என 3 படங்களின் கலவையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள். ஷங்கர் இன்னும் பழைய டைப் பார்முலாவையே பின்பற்றுகிறார். அவருக்கு இந்தப் பிரம்மாண்டம்தான் பெரிதாகத் தெரிகிறது. அதில் இருந்து வெளியே வர மாட்டேங்குறார் என்றெல்லாம் தகவல்கள் வந்தன.
கடைசியாக கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்டு போடுவார்களா என்றெல்லாம் பேசப்பட்டது. அதனால் படம் வெளியாவதில் சிக்கல் என்றார்கள்.
இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு வந்துள்ளது. விரைவில் படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்து இருந்தது லைகா நிறுவனம்.
கமல் இந்தியா திரும்பிய பிறகு பேசிக் கொள்ளலாம் என சுமூகமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதே போல கொடுத்த புகாரையும் லைகா நிறுவனம் திருப்பப் பெற்றுள்ளதாம்.
ஷங்கர் இயக்கத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் படம் வெளியாக உள்ளது. ராம்சரணின் அதிரடி திரைப்படம் இது. தமன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ், ஷங்கர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தை ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்குகிறார்.
அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. கேம் சேஞ்சரில் ராம் சரண் தான் ஹீரோ. கியாரா அத்வானி அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.