கோட் படத்தின் இரண்டாம் பாகமா? திடீர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… ரெடியா புரோஸ்!
Vijay: தளபதி விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்திருக்கும் அப்டேட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கடந்த சில படங்களாகவே அவருக்கு ஒவ்வொரு படத்துக்கும் 50 கோடி சம்பளம் அதிகமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு 275 கோடி சம்பளம் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தினை கேவிஎன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும் தற்போது வந்து இருக்கும் தகவலின் படி விஜயின் கடைசி படம் முடிந்த கையோடு அரசியலுக்கு செல்ல இருக்கிறார்.
இதனால் அவரின் கடைசி படங்களை இயக்கிய நெல்சன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் மூவரும் இணைந்து ஒரு பாடலில் கேமியோ ரோலில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையானால் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும்.
இப்படத்திற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். முதலில் இப்படம் சயின்ஸ் பிக்ஷன் கதையாக இருக்கும். டைம் டிராவல் என பல தகவல்கள் கசிந்தது. ஆனால் அப்பா மற்றும் மகன் என சாதாரண கதையாக இருந்தது.
ஆனால் படத்தின் கிளைமேக்ஸில் இறந்த வில்லன் விஜய் தன்னுடைய க்ளோனிங்கை ரெடி செய்து வந்தார். அதில் ஓஜி எனக் குறிப்பிட்டு இருந்தது. இதனால் இரண்டாம் பாகம் வருமா என ஆசை இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு போவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என நினைக்கப்பட்டது.
இந்நிலையில் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் GOATvsOG படம் குறித்து 2026ம் ஆண்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார். ஒருவேளை விஜய் தேர்தல் முடிந்த பின்னர் நடிக்க வரலாம் என்பதை தான் இப்படி சொல்கிறாரோ என ரசிகர்கள் ஆசையுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.