சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல.. பொய்யான வதந்தி.. பொங்கி எழுந்த இளையராஜா!..
தன்னைக் குறித்து பரவும் வதந்திகளுக்கு இசைஞானி இளையராஜா விளக்கம் அளித்து இருக்கின்றார்.
இசைஞானி இளையராஜா:
உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். இன்றும் மற்ற இசையமைப்பாளர்களுக்கு இணையாக படங்களில் இசையமைத்து வருகின்றார். இவரது இசையில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜமா. இதனை தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்திருக்கின்றார்.
இப்படத்திலிருந்து வெளியான தினம் தினமும் என்ற பாடல் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கின்றது. விடுதலை 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முடிந்தது.
மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். இசைஞானி இளையராஜா என்றாலே அவரைச் சுற்றி எப்போதும் சில விமர்சனங்கள் வலம் வரும். அதாவது அவர் அனைவரிடத்திலும் தலைகனத்தோடு நடந்து கொள்கிறார்.
தன்னுடைய பாடல்களை பயன்படுத்துபவர்களுக்கு காப்பிரைட்ஸ் கொடுத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றார். மேலும் தன்னுடன் பாடுபவர்களை அவர் மதிப்பதில்லை என்றெல்லாம் பல பிரச்சனைகள் அவரை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும். அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் தற்போது வரை சினிமாவில் பிஸியாக இருந்து வருகின்றார் இளையராஜா.
81 வயதாகும் இளையராஜா என்றும் சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். தன் திரை வாழ்க்கையில் பாரதிராஜா முதல் பாலா வரை ஏராளமான புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்த வரும் இளையராஜா. ஒரு காலத்தில் இவரின் இசையால் பல படங்கள் ஹிட்டுக் கொடுத்துள்ளது.
இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இளையராஜா இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கின்றார். அப்போது இளையராஜா கருவறைக்குள் நுழைந்து தரிசனம் செய்ய இருந்தபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் கருவறைக்கு வெளியே வந்து சாமி தரிசனம் செய்து கோவில் மரியாதைகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த செய்தி சமூக வலைதள பக்கங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. காலை முதலே பலரும் இந்த விஷயத்தை பெரிதாக்கி ஆளுக்கு ஒரு கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இசைஞானி இளையராஜா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம்' என்று கூறியிருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.