Sk25 பூஜையால் கடுப்பான ஏ.ஆர் முருகதாஸ்... ஒரு தாடிக்கு இந்த அக்கப்போரா?!..
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனை
SK25: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் எஸ்.கே 25 திரைப்படத்தின் பட பூஜையை தொடர்ந்து ஆர் முருகதாஸ் உடன் அவர் நடித்து வரும் படத்தில் பிரச்சனை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீ லட்சுமி மூவி நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு கோலிவுட்டில் படம் ஏற்று வரும் முருகதாஸ் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே முருகதாஸ் தற்போது சல்மான் கான் வைத்து பாலிவுட்டில் சிகாந்தர் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
தற்போது சல்மான் கான் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்திருப்பதால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தை பிரேக் விட்டு தற்போது சல்மான் கான் படத்தில் முழு வீச்சாக ஏ ஆர் முருகதாஸ் இயங்கி வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இப்படத்தின் ப்ரோமோ சூட்டிங் நடந்தபோது தாடியை எடுக்க கூறி சுதா மற்றும் எஸ்.கே இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதற்குப் பின்னால் முக்கிய காரணமாக இருந்தது ஏ ஆர் முருகதாஸ் தானாம். சிவகார்த்திகேயனை தாடி எடுக்கக் கூடாது என கண்டிப்பாக சொல்லி இருக்கிறார் முருகதாஸ். முதலில் சிவகார்த்திகேயனும் அவர் பேச்சைக் கேட்டு சம்மதம் தெரிவிக்க சிக்கந்தர் திரைப்படத்தால் விழ இருக்கும் மிகப்பெரிய கேப்பை SK25ல் பயன்படுத்தி கொள்ள முடிவெடுத்து விட்டாராம்.
இதைத்தொடர்ந்து தைரியமாக சிவகார்த்திகேயன் கிளீன் ஷேப் லுக்கில் பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே உங்கள் படத்திற்காக மூன்று மாதம் இடைவெளி எடுத்திருக்கிறேன். இனிமேலும் ஒரு மாதம் பிரேக் இருப்பதால் அதற்குள் நான் இந்த படத்தை முடித்து விடுவேன். உங்கள் படத்திற்காக நிறைய விட்டுக் கொடுத்தாகிவிட்டது இதைவிட முடியாது என சிவகார்த்திகேயன் மறுத்து பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் எஸ்கே25 திரைப்படத்திற்கு பின்னால் ரெட் ஜெயன்ட் இருப்பதாகவும் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் முருகதாஸ் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Also read: அவருதானே ஹீரோ'... ஆத்தீ! வன்ம குடோனா இருப்பாரு போல!