ஜனநாயகன் பாலையா பட ரீமேக்கெல்லாம் இல்லை!.. இப்படி ஹைப் ஏத்துறாங்களே!..

By :  MURUGAN
Published On 2025-05-19 13:31 IST   |   Updated On 2025-05-19 14:33:00 IST

கோட் படத்திற்கு பின் விஜய் நடிக்க துவங்கிய படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை கேவிஎன் புரடெக்‌ஷன் எனும் ஆந்திராவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது. அப்போது இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது. மேலும், அந்த படத்தின் இயக்குனர் அனில் ரவிப்புடியையே விஜய் படத்தையும், இயக்க அழைத்ததாகவும், ஆனால், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.


பகவந்த் கேசரி படம் ஒரு பக்கா ஆந்திரா மசாலா கதை. தன் பெறாத பெண்ணின் லட்சியத்திற்காக ஒருவன் போராடுகிறான். அவனுக்கு எதிரியாக ஒரு கார்ப்பரேட் வில்லன் வருகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. பாலையாவுக்கு ஏற்றார் போல ஹீரோயிசம் கொண்ட காட்சிகள் நிறையவே இப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.

எனவே, தமிழுக்கும், விஜய்க்கும் ஏற்றவாறு கதையில் சில மாற்றங்கள் செய்து எடுப்பார்கள் என பலரும் நினைத்தனர். ஆனால், கட்சி தொண்டர்களுடன் விஜய் செல்பி எடுப்பது போல போஸ்டர் வெளியானது. எனவே, இது அரசியல் படமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. ஆனால், ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் போலீஸ் உடையில் நிற்கும் புகைப்படம் லீக் ஆனது. எனவே, இந்த படத்தின் கதை என்ன என்கிற ஆர்வம் பலருக்கும் எழுந்திருக்கிறது.


ஒருபக்கம், கமல் தனக்காக எழுதி வைத்திருந்த தலைவன் இருக்கிறான் பட கதையை விஜய்க்காக விட்டு கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஜனநாயகன் படம் பாலையாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. பகவந்த் கேசரி படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு பாலையா குட் டச் மற்றும் பேட் டச் ஆகியவற்றை சொல்லிக் காட்சியை மட்டும் ஜனநாயகன் படத்தில் பயன்படுத்திருக்கிறார்கள்.

இந்த ஒரு காட்சிக்காக சட்டரீதியான சிக்கல் வரக்கூடாது என்பதற்காக பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கையும் தயாரிப்பு நிறுவனம் வாங்கிவிட்டார்களாம். வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது கமல் தனக்காக எழுதிய தலைவன் இருக்கிறான் கதையில்தான் விஜய் நடிக்கிறார் என்றே கருதப்படுகிறது. அந்த கதையில் கமல் நடிக்க ஹெச்.வினோத் இயக்குவதாக இருந்து அது டிராப் ஆனது. ஹெச்.வினோத் கேட்டதால் அந்த கதையை கமல் விஜய்க்காக கொடுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

Tags:    

Similar News