அம்மா, அப்பா தயவுல தான் ஹீரோயின் ஆகப் போறேன்!.. ஓவர் பந்தா இல்லாம பேசிய குஷ்பு மகள்!..

நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா தக் லைஃப் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகாவும் நடிகையாக களமிறங்க உள்ளார்.;

By :  SARANYA
Published On 2025-06-09 18:13 IST   |   Updated On 2025-06-09 18:13:00 IST

நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா தக் லைஃப் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகாவும் நடிகையாக களமிறங்க உள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் அவந்திகா பேசியிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நான் மிகவும் உயரமாக இருப்பதால் எனக்கு கொஞ்சம் கஷ்மாக இருந்தது, எல்லாரும் என்னை விட சின்னதாக இருக்கிற மாதிரி இருக்கும், எங்கயாவது போனா குனிஞ்சு போகணும் குனிஞ்சு உட்காரணும் இதெல்லாம் சகஜம் தான்னு நெனச்சு பழக எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.


சின்ன வயசுல நான் ரொம்ப குண்டா கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்க மாட்டேன். நடிக்க ஆசை இருந்தது. ஆனால், நான் சீரியசா எடுத்துக்கல. பேண்டமிக் டைம்ல தான் நான் என்ன கேர் எடுத்து எடைய குறைச்சேன், நான் யாருடைய உதவி இல்லாம தான் வந்தேன்னு சொல்ல மாட்டேன், என் அம்மா, அப்பா சினிமால இருகுறதுனால வாய்ப்புகள் சுலபமா கிடைக்குது, ஆனால் நான் முயற்சி செய்றதுனாலையும் தான் கிடைக்குது.

நான் நடிக்கணும்னு சொன்னதுக்கு என் அப்பா,அம்மா இரண்டு பேரும் சப்போர்ட் தான் பண்ணாங்க, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்ணு சொன்னாங்க. அதோட எங்களோட தயாரிப்பு நிறுவனம் மூலம் நான் அறிமுகமாக மாட்டேன், ஏன் என்றால் அது ரொம்ப அட்வான்டேஜ் எடுக்ற மாதிரி இருக்கும் அப்றமா நடிப்பேன், ஆனா அறிமுகம் மட்டும் ஆக மாட்டேன்.


என்னுடைய பெற்றோர் இருவரும் வெவ்வேறு திசையில் பிஸியாக இருந்தாலும் எங்களுக்காக எந்த இடந்த்திலும் ஆப்ஸண்டா இருந்தது இல்லை. என் அம்மா ஷூட்டிங்கில் இருந்தாலும் எனக்கு சாப்பாடு கட்டி ஸ்கூல்ல விட்டுட்டு தான் போவாங்க, அதனால அவங்கள நான் எப்பவுமே மிஸ் பண்ணதில்லை.

நான் பல ஸ்கிரிப்ட் கேட்டுக்கொண்டிருக்கிறேன், நல்ல கதை நல்ல கேரக்டர் வருது. எனக்கு காமெடி, த்ரில்லர், ஹாரர் அப்படி எல்லா விதமான படத்தையும் பண்ணணும்னு ஆசை. நான் இவ்ளோ தான் பண்ணுவேன்னு இல்ல. என்னுடைய பாட்டியோட பெயர் தான் நான் முதல்ல டாட்டூ போட்டேன். வெப்சீரிஸ் பண்றதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு, கரீஸ்மா என்னுடைய தங்கை மாதிரி வேற யாரையும் சினிமால தெரியாது. எந்த ஹீரோ பிடிக்கும்னு சொல்ல மாட்டேன், நடிச்சதுக்கு அப்புறம் சொல்றேன், இவர் கூட தான் நடிக்க அசைப்பட்டேன்னு என்று மனம் திறந்து பேசியுள்ளார் அவந்திகா.

Tags:    

Similar News