Coolie Movie 2025: கூலி படத்துல லோகேஷோட சேலஞ்சிங்கான விஷயம் இதுதான்..! அப்படியே ஓப்பனா சொல்லிட்டாரே!
வரும் ஆகஸ்டு 14ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் 3 சிங்கிள்ஸ் மற்றும் டைட்டில் டீசர், மேக்கிங் வீடியோ என பல அப்டேட்கள் வந்துவிட்டன. வரும் ஆகஸ்டு 2ல் படத்தின டிரெய்லர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாகிர் என பெரிய பெரிய ஜாம்பாவான்கள் நடித்துள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.
கூலி படம் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பற்றியும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நீயா நானா கோபிநாத்திடம் பகிர்ந்துள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.
ரஜினி கூலி படத்துல ரஜினிக்கு 45 நாள் நைட் சூட்டிங். எப்படி வர வைக்கறதுன்னு சேலஞ்சிங்கா இருந்தது. ரஜினிக்கும், சுருதிஹாசனுக்கும் தான் 45 நாள் ஃபுல் நைட் சூட்டிங் இருந்தது. 74 வயசுல நைட் 2 மணி வரைக்கும் சூட்டிங். அதுவும் ஆக்ஷன் சீக்வன்ஸ்.
அந்த வயசுல நாம எல்லாம் எழுந்து நடப்போமான்னு தான் தோணுது. ஆனா ஜாலியா இருந்தாரு. கேங்ஸ்டர் பிலிம். எல்லாருமே ஆம்பளைங்க. ஒரே ஒரு பெண்ணுன்னா அது சுருதிஹாசன்தான். கமல் சார் அடிக்கடி கூலி படம் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு சுருதியிடம் கேட்பாராம். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
loலோகேஷூக்கு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோன்னு ஒரே கேங்ஸ்டர் படம் தான். அதனால அவருக்கு ஒரே ஃபார்முலா. டெக்னீஷியன்களும் இவருக்கிட்ட 10 வருஷங்களுக்கு மேலா இருக்குறதால ஒரே மாதிரி இவரு என்ன நினைக்கிறாரோ அதைக் கொடுத்துடுவாங்க.
முன்னாடி படம் பண்ணும்போது முதல்ல ரிலீஸ் டேட் பிக்ஸ் பண்ணிடுவாங்க. அந்த நெருக்கடி இந்தப் படத்துக்கு இல்லை. சன் பிக்சர்ஸ் நல்ல சுதந்திரம் கொடுத்தாங்க. ஆனா படத்தோட ரிலீஸ் டேட்டை எப்ப அறிவிக்கலாம்னு உங்களுக்குத் தோணுதோ அப்போ சொல்லுங்கன்னு சொன்னாங்க. அதனால எனக்கு படத்தை எங்களால கொஞ்சம் ஃப்ரீயா எடுக்க முடிஞ்சது என்கிறார் லோகேஷ்.