Pandian Stores2: கதிருக்கு புதிய பிரச்னைக்கு ஸ்கெட்ச் போட்ட ராஜி… காலி பண்ணப்போகும் சக்திவேல்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தவர் கோமதி. ஆனால் ராஜியின் காதலன் வீட்டில் இருந்து திருடி எடுத்து சென்ற கண்ணனால் சக்திவேல் மற்றும் முத்துவேல் நகை போனதற்கு காரணமாக கதிரை திட்டி வந்தனர்.
இந்நிலையில் கண்ணன் சமீபத்தில் பிடிக்கப்பட்டு அவனிடம் இருந்த பாதி நகைகள் மீட்கப்பட்டது. அதை வைத்து வியாபாரத்தை தொடங்கலாம் என ராஜி சொன்ன போதே கதிர் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார். உடனே நகையை வீட்டில் கொடுக்க சொன்னார்.
அந்த சமயத்தில் அரசியின் திருமண விவகாரம் வீட்டில் உடைந்தது. இதனால் ராஜி பொறுத்திருந்து நகையை கொடுக்கலாம் என கதிரிடம் சொல்லி இருந்தார். இந்நிலையில் கதிரின் பிசினஸ் விவகாரத்திற்கு பாண்டியனே சூரிட்டி கையெழுத்து போட ஒப்புக்கொண்டார்.
ஆனால் அது தெரியாத ராஜி தன்னுடைய நகையை விற்று கதிரிடம் கொடுக்க முடிவெடுத்து பேங்கிற்கு வந்து இருக்கிறார். அவர் நகை விற்கும் வேலையில் அதை சக்திவேல் பார்த்துவிடுகிறார். தற்போது குமரவேல் ஜெயிலில் இருக்கும் வேலையில் இதை என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கண்டிப்பாக பாண்டியனை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு வீட்டில் பிரச்னை செய்யலாம். இல்லை இதை பயன்படுத்திக்கொண்டு குமாரை வெளியில் எடுக்க பயன்படுத்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.