எனக்கு வந்த மிரட்டல்.. ஃபேமிலியை காட்டாததற்கு இதுதான் காரணம்! பாவம்தான் லோகேஷ்

By :  ROHINI
Published On 2025-07-27 13:38 IST   |   Updated On 2025-07-27 13:38:00 IST

lokesh

மாநகரம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே அவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அந்தப் படத்தில் பெரிய ஸ்டார்கள் இல்லை என்பதால் ஒரு சாதாரண வெற்றியாகவே பார்க்கப்பட்டது. அதனை அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை கொடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் லோகேஷ் மீது திரும்பியது.

அதுவரை தமிழ் சினிமாவிற்கு என ஒரு தனி டிரெண்ட் செட்டர் இருந்தது. அதை கைதி படத்தின் மூலம் முற்றிலுமாக மாற்றியமைத்தார் லோகேஷ். ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக கைதி படம் அமைந்ததனால் அதுவே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கைதி படத்திற்கு பிறகு தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார் லோகேஷ்.

இப்போது ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். அந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்கிற்கு வரவிருக்கின்றது. லோகேஷ் படங்களை பொருத்தவரைக்கும் எல்லாமே ஆக்‌ஷன் படங்களாகத்தான் அமைந்திருக்கின்றன. கூலி திரைப்படமும் ஒரு கேங்ஸ்டர் படமாகத்தான் உருவாகியிருக்கின்றது. மேலும் படத்தில் பெரிய பெரிய ஸ்டார்களும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் புரோமோஷன் வேலையை ஆரம்பித்திருக்கிறார் லோகேஷ். பல விஷயங்களை நேர்காணல் மூலம் கூறி வரும் லோகேஷ் தன்னுடைய ஃபேமிலியை இதுவரைக்கும் சோசியல் மீடியாக்களில் காட்டாததற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார். இன்னும் சில பேருக்கு லோகேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்றே தெரியவில்லை.

ஆனால் அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கோபிநாத் லோகேஷிடமே கேட்டிருக்கிறார். அதாவது சில சமயங்களில் லோகேஷ் பற்றி கடுமையான விமர்சனங்கள் சோசியல் மீடியாக்களில் வரும் போது அதை அவருடைய மனைவியும் குழந்தைகளும் புரிந்து கொள்கிறார்களா என்ற கேள்விய கோபிநாத் கேட்டிருப்பார்.

அதற்கு லோகேஷ் ‘என்னுடைய முதல் படத்திலேயே என்னுடைய ஃபேமிலியை பற்றி பேசியிருப்பேன். அதன் பிறகு அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் அவர்களுடைய பிரைவேசியை நான் கெடுக்கக் கூடாது என நினைத்தேன். யாராவது ஒருத்தர் அவர்களை டேக் செய்யும் போது அவர்களுடைய மனநிலை என்னவாக இருக்கும்? இப்போது சோசியல் மீடியாக்களில் நிறைய ஹேட்டர்ஸ்கள் இருக்கிறார்கள்’

‘உதாரணமாக சொன்னால் நான் நிறைய நடிகர்களுடன் நட்புடன் பழகி வருகிறேன். எல்லா நடிகர்களுக்குள்ளும் ஃபேன்ஸ் வார் போய்க்கொண்டிருக்கும். தூக்கத்தில் அதை நான் பார்க்கும் போது தெரியாமல் லைக் விழுந்துவிடும். அப்படித்தான் ஒரு நடிகருக்காக லைக் போட்டுவிட்டேன். தெரியாமல் பண்ண தவறு அது. ஆனால் அதற்குள் எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள். அதன் பிறகு அன் லைக் போட்டுவிட்டேன். ’

‘இப்போது என்னுடைய கணக்கை எல்லாம் மேனேஜர்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பக்கமே நான் போவதில்லை. இதனால் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. நான் எப்படி ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் பையனாக வளர்ந்து வந்தேனோ அப்படித்தான் என் குழந்தைகளும் வர வேண்டும்’ என லோகேஷ் கூறினார். 

Tags:    

Similar News