வாட்டர்மெலன் ஸ்டாரை வச்சி செய்த ஆங்கர்... நடந்தது என்னன்னு தெரியுமா?

By :  SANKARAN
Published On 2025-07-27 13:48 IST   |   Updated On 2025-07-27 13:48:00 IST

சமீபத்தில் வாட்டர்மெலன் ஸ்டார்னு சொல்லிக்கிட்டு திவாகர் என்ற ஒரு பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் பந்தா பண்ணி வருகிறார். அதாவது கஜினி படத்தில் சூர்யா தர்பூசணியை சாப்பிட்ட படி ஒரு சில மேனரிசங்கள் செய்வார். அதை ஃபாலோ பண்ணியபடி இவரும் பந்தா பண்ணிக் கொண்டு தானும் ஒரு வாட்டர்மெலன் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார். இவரை அனைத்து நெட்டிசன்களுமே வச்சி செய்கின்றனர். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

இவர் பண்ணிய கோமாளி சம்பவங்களுக்கு அளவே இல்லை. 3 படத்தில் தனுஷ் கடைசியில் எப்படி இறப்பாரோ அது போன்றும் பண்ணினார். அதே போல கர்ணன் படத்தில் கடைசியில் சிவாஜி இறப்பது போன்று நடித்து கோமாளி வேலை பார்த்துள்ளார். அவர் நடிகர் சூரியையும் மட்டம் தட்டிப் பேசியுள்ளார்.

அவரு பெயிண்ட் அடிக்கிற மாதிரிதான் வேலை செய்கிறார். நான் நிறைய படித்துள்ளேன். நான் 500, 1000த்துக்கு எல்லாம் நடிக்க மாட்டேன். என் திறமையைக் காட்டிட்டேன். என்னைக் கடவுளும், கலைத்தாயும் அடுத்த லெவலுக்குக் கொண்டு போவாங்க என்று பேசி கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுக்க வந்தார். நான் ஏற்கனவே வாட்டர்மெலன் ஸ்டார் ஆகிட்டேன். மக்கள் மத்தியில் எனக்கு நல்ல செல்வாக்குன்னு சொன்னார். அதுக்கு அந்த ஆங்கர் நிஜ வாழ்க்கையில் நடக்க முடியாத விஷயங்களை நினைத்து சிலர் கனவு வாழ்க்கையில் வாழ்வாங்கன்னு சொன்னார்.


உடனே திவாகர் டென்ஷன் ஆகி எழுந்து பேட்டியை முடிச்சிக்கலாம்னு சொல்லிவிட்டார். உட்காருங்க. வாங்க. நான் நெகடிவா கேட்க மாட்டேன்னு சொன்னார். நல்ல விஷயங்களைக் கேளுங்க. வேறு உலகத்துல இருக்கேன்னு சொன்னா என்ன அர்த்தம்னு டென்ஷன் ஆனார் திவாகர். எதுவாக இருந்தாலும் பேட்டியில் சொல்லுங்கன்னு ஆங்கர் சொல்ல கடுப்பாகி கிளம்ப... மைக்கைக் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியல. நீங்க கொடுக்குற 10 கேள்வியைத் தான் நான் கேட்கணுமா? உங்களை அப்படியே அழைச்சிட்டு வந்து கொஞ்சி அனுப்வாங்களான்னு அந்த ஆங்கர் திவாகரை வச்சி செய்து விட்டார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்... https://www.facebook.com/watch?v=1063913672591026

Tags:    

Similar News