ஷங்கரின் உதவி இயக்குனர் மட்டும் தான் அதை செய்வாரா!.. என்னோட மாரி செல்வராஜும் செய்வார் - ராம்!..

சில நாட்களில் மாரிசெல்வராஜ் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானுடம் படம் பண்ணி ஒரு பான் இந்திய இயக்குனராக மாறுவார்.;

By :  SARANYA
Published On 2025-07-02 21:26 IST   |   Updated On 2025-07-02 21:26:00 IST

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ராம் தனது உதவி இயக்குனரான மாரி செல்வராஜை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வை உணர்த்தும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.


இயக்குனர் ராம் பிரபல இயக்குனர்களான பாலு மகேந்திரா, தங்கர் பச்சான், இந்தி இயக்குனர்களான ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். கற்றது தமிழ் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை இயக்கியிருந்தார். அப்பா மற்றும் மகளின் பாசத்தை வெளிபடுத்தியிருந்த ராம் தற்போது பறந்து போ படத்தில் அப்பா மற்றும் மகனின் உறவை மையமாக கொண்டு எடுத்துள்ளார்.

மாரி செல்வராஜ் மற்றும் எஸ்.யு. அருண் குமார் போன்ற இளம் இயக்குனர்கள் ராமின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள். மேலும், என்னுடைய உதவி இயக்குனர்கள் வளர்ந்து வந்து முன்னணி நடிகர்களுடன் படம் இயக்குவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் மாரி செல்வராஜ் படங்களை புகழ்ந்து பேசினால் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கும், அதுவும் என்னுடைய வெற்றி தான். ஆனால் அந்த வெற்றி போதுமானது அல்ல, இன்னும் அவரிடம் அதிகமான திறமை உள்ளது.

இன்னும் சில நாட்களில் அவர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானுடம் படம் பண்ணி ஒரு பான் இந்திய இயக்குனராக மாறுவார். அப்போது நான் அங்கே சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மேலும், நான் ஷாருக்கானின் மிகப் பெரிய ஃபேன் என பேசியுள்ளார் இயக்குனர் ராம்.

Tags:    

Similar News