பிரபுதேவாவுடனான காதலுக்கு இவங்கதான் காரணம்… என்ன அம்மணி இப்படி உடைச்சி பேசிட்டீங்க!...
நயன்தாரா மற்றும் பிரபுதேவா உடனான காதல் குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார்.
Nayanthara: நடிகர் பிரபுதேவாவை காதலித்தது குறித்து நயன்தாரா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. மிகப் பெரிய உச்சத்திற்கு சென்றாலும் அவர் மீது இருந்த விமர்சனங்கள் தான் அதிகம். அதன் காரணமாகத்தான் அவரின் வளர்ச்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிம்புவுடன் ஆன காதல் முடிவிற்கு பின்னர் நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை காதலிக்க தொடங்கினார். பல இடங்களில் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். பிரபு தேவாவின் பெயரை டாட்டோவாக போட்டுக் கொண்டார்.
இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து பிரபுதேவா தன்னுடைய முதல் திருமணத்தை முடித்துக் கொள்ள நீதிமன்ற படியேறினார். அவருக்கு விவாகரத்து கிடைத்தும், நயன்தாராவுடனான காதல் முறிந்தது. இதை தொடர்ந்து நடிப்பில் மிகப்பெரிய பிரேக் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய ரீ என்ட்ரியை கொடுத்தார். அதன் பின்னர் அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சி கிடைத்தது. தனிநாயகியாக அவர் நடித்த எல்லா படங்களுமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனாலும் சமீப காலங்களாகவே நயன்தாரா நடிப்பில் வெளியாகும் எந்த படங்களும் வெற்றி படங்களாக அமையவில்லை. இதை தொடர்ந்து நயன்தாரா தற்போது அதிக அளவில் வெளியிடங்களில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் அனுபமா சோப்ராவிற்கு கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் தன்னுடைய துறை வாழ்க்கையில் இருந்த சர்ச்சைகளை பேசியிருக்கிறார். அந்த வகையில் நடிகர் பிரபுதேவா உடன் இருந்த காதல் குறித்தும் நயன் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், சினிமா துறையில் நிறைய இரண்டாம் திருமணங்களை பார்த்து இருக்கிறேன்.
அவர்களை நான் தப்பு சொல்ல விரும்பவில்லை. அந்த நேரத்தில் சினிமாத்துறை அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் இப்படியான உறவுகள் சரியானது தான் என்பது என்னுடைய நிலைப்பாடாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், தான் தப்பே செய்யவில்லை சினிமா துறையால் தான் அந்த காதலையே செய்தேன் என நயன்தாரா பேசியது எப்படி சரியாகும். அப்பொழுது எனக்கு காதல் தேவைப்பட்டது அதை கொடுத்தவர் பிரபுதேவா தான்.
இதனால் தான் அவர் முதலில் திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலித்தேன் என்றுதான் நயன்தாரா சொல்லி இருக்க வேண்டும். தற்போது அவர் அப்படி சொல்லி இருந்தாலும் கேட்க ஆள் கிடையாது. ஆனால் அந்த தைரியம் தான் நயனிடம் தற்போது இல்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.