ரஜினி ஒரு பெரிய ஸ்டார்னே எனக்கு தெரியாது!.. அப்பாவியாக சொன்ன நயன்தாரா!...
Nayanthara : ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நயன்தாரா. டயானா மரியம் குரியன் என்கிற நிஜ பெயரை சினிமாவுக்காக நயன்தாரா என மாற்றிக்கொண்டார். துவக்கத்தில் நல்ல வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். தொடர்ந்து மொக்கையான படங்களில், மொக்கை கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: செந்தாமரையின் திருமணம் இப்படியா நடந்தது? அண்ணா செய்த மேஜிக்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா இருந்தும் அவரை பற்றி அப்போது யாருமே பேசவில்லை. ஏனெனில், அசினே அப்படத்தின் கதாநாயகியாக தெரிந்தார். அப்போது கொஞ்சம் குண்டாகவும் இருந்தார் நயன். அந்த தோற்றத்திலேயே சில படங்களில் நடித்தார். அதன்பின் ஒருவழியாக உடல் எடையை குறைத்து சிக்கென மாறினார்.
ராஜா ராணி படத்தில் அவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டார்கள். அதன்பின் ரஜினி, விஜய், அஜித் என சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார். விஜயுடன் வில்லு, பிகில் ஆகிய படங்களில் நடித்தார். இதில் வில்லு படத்தில் பல காட்சிகளிலும் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார்.
ஒருகட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக மாறி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு 2 வருடங்களுக்கு முன்பே அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வப்போது நயன்தாரா செய்யும் விஷயங்கள் செய்திகளில் அடிபடும் அல்லது சர்ச்சையையும் ஏற்படுத்தும். சமீபத்தில் தனுஷ் மீது சேறை வாரி இறைத்து காட்டமாக அறிக்கையும் விட்டார். ஆனால், தனுஷ் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நயன்தாரா பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சந்திரமுகி படத்தில் என் முதல் காட்சி ரஜினி சாருடன் இருந்தது. அப்போது அவர் பெரிய நடிகர், சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அப்படி தெரியாமல் இருந்ததால்தான் எனனால் இயல்பாக அவருடன் நடிக்க முடிந்தது. இல்லையேல் பயம் வந்திருக்கும். எனவே, நட்சத்திர அந்தஸ்து பற்றி எனக்கு தெரியாமல் இருந்ததே எனக்கு மிகவும் உதவியது’ என சொல்லி இருக்கிறார்.
சந்திரமுகிக்கு பின் குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய ரஜினி படங்களில் நயன்தாரா நடித்திருந்தார்.