தளபதி 69 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை லீக் செய்த பூஜா ஹெக்டே!.. செம வைரல்...

By :  Murugan
Update: 2024-12-21 02:38 GMT

பூஜா hegde

Thalapathy 69: தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ஆனால், இப்போது இவரின் இடத்தை ராஷ்மிகா கண்ணா பிடித்துவிட்டார். இவரின் சொந்த மாநிலம் கர்நாடகா. ஆனால், கன்னடத்தை விட தெலுங்கு படங்களில்தான் நடித்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் என இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

மும்பையில் பிறந்து வளர்ந்த பூஜா ஹெக்டேவுக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்தது. சில அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டார். அப்படித்தான் இவருக்கு முகமூடி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் போனார்.


அது அவருக்கு கை கொடுக்கவே தொடர்ந்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார். சமீபகாலமாக ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார். தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். விஜய் - பூஜா ஜோடி பார்ப்பதற்கே அழகாக இருந்தது. இருவரும் சேர்ந்து நடனமாடிய அரபிக்குத்து பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜயின் உயரத்திற்கு ஏற்றவராக பூஜா ஹெக்டே இருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பின் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியலுக்கு போய்விட்டதால் இதுதான் விஜய் நடிக்கும் கடைசிப்படம் எனவும் சொல்லப்படுகிறது.



இந்நிலையில், 2024ம் வருடத்தில் இதுதான் என்னுடைய கடைசி ஷூட் என பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விஜய் மற்றும் அவரின் கால்களை போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். கடற்கரை மணலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் லைக்ஸ்களை போட்டு வருகிறார்கள்.


Tags:    

Similar News