காஞ்சனா 4-ல் விஜய் பட நடிகையா?.. அடுத்த வருஷம் அம்மணி காட்டில் மழைதான் போலயே!..

நடிகர் ராகவா லாரன்ஸ் எடுக்க இருக்கும் காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்.

By :  Ramya
Update: 2024-12-19 05:54 GMT

kanchana4

நடிகர் ராகவா லாரன்ஸ்:

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனர், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். தனது திரைப்படங்களின் மூலம் இவர் பிரபலமானதை காட்டிலும் தான் மற்றவர்களுக்கு செய்யும் உதவி மூலமாக தமிழக மக்கள் நெஞ்சில் வாழ்ந்து வருகின்றார் ராகவா லாரன்ஸ்.


சிறு குழந்தை தொடங்கி பெரியவர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகின்றார். தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது ரத்தினகுமார் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது.

காஞ்சனா படங்கள்:

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹாரர் படங்களையும் காமெடியாக மாற்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் மாற்றியவர். முனி திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய காஞ்சனா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காஞ்சனா படத்தில் சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் மூலம் கிடைத்த வெற்றி காரணமாக அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வந்தார் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்களை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படங்கள் ரசிகர்களே சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

காஞ்சனா 4:

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருவதால் அடுத்ததாக காஞ்சனா 4 படத்தை அவர் இயக்குவாரா இல்லையா என்று சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சனா 4 திரைப்படம் நிச்சயம் வரும் என்று கூறியிருந்தார். காஞ்சனா படங்கள் அனைத்துமே ராகவா லாரன்ஸ் தானே இயக்கி தயாரித்து நடித்திருந்தார்.


அதேபோல தான் காஞ்சனா 4 திரைப்படத்தையும் எடுக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். பொதுவாக ராகவா லாரன்ஸ் படங்களில் பிரபலமான நடிகைகள் நடிப்பது வழக்கம் தான். முந்தைய பாகங்கள் அனைத்திலும் ஏராளமான நடிகைகள் நடித்திருந்தார்கள். அந்த வகையில் காஞ்சனா 4ல் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

பூஜா ஹெக்டே லைன் அப்:

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்திலும் கதாநாயகியாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் மூன்றாவதாக ஒரு திரைப்படத்தில் அவர் இணைய இருப்பதால் அடுத்த வருடம் அவருக்கு மிகச் சிறந்த வருடமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News