அரெஸ்ட் பண்ணதால் எகிறிய புஷ்பா 2 வசூல்!.. 2 நாளில் மட்டும் இவ்வளவு கோடியா?!..
Pushpa 2: தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் செம்மரக்கட்டை கடத்தலை அடிப்படையாக வைத்து இவர் நடித்த புஷ்பா படம் பேன் இண்டியா சினிமாவாக வெளியாகி ஹிட் அடித்தது.
தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் பாகம் எடுக்கும்போதே இப்படம் 2 பாகம் என முடிவெடுத்தனர். முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாம் பாகத்தை மிகவும் அதிக செலவு செய்து எடுத்தார்கள். சுமார் 400 கோடி வரை செலவு செய்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் எல்லா மொழியிலும் வரவேற்பை பெற்று இதுவரை 1500 கோடியை நெருங்கிவிட்டது. 10 நாட்களில் 1000 கோடியை அள்ளிய இந்த படம் 2 நாட்களில் 490 கோடியை வசூல் செய்திருக்கிறது. புஷ்பா 2 படம் வெளியானபோது அப்படத்தின் ஹீரோ அல்லு ஆர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்க போனார்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அவரின் மகனும் சிக்கினார்கள். இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஒருபக்கம், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுவும் அளித்தார். ஆனால், போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். நீதிமன்றம் அவரை சிறையில் வைக்க உத்தரவிட்டது.
இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜூன் மீது தவறே இல்லை. அது ஒரு விபத்து என பலரும் சொன்னார்கள். ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகளும் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அன்று இரவு நீதிமன்றம் பெயில் கொடுத்தும் அல்லு அர்ஜூனை வெளியே விடாமல் அடுத்த நாள் காலையே அவரை விட்டனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் ‘அது ஒரு சோக நிகழ்வுதான். ஆனால், எனக்கும் அதற்கு சம்பந்தம் இல்லைல். அது ஒரு விபத்து. அந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த சிறுவனை சென்று பார்க்க முடியவில்லை’ என சொல்லி இருந்தார்.
ஒருபக்கம் அல்லு அர்ஜூனை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அல்லு ஆர்ஜூனின் கைதுக்கு பின் புஷ்பா 2 படத்தின் வசூல் 70 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால்தான் 2 நாட்களில் இப்படம் 490 கோடி வசூலை அள்ளியதாக சொல்லப்படுகிறது.