புஷ்பா ஆட்டம் தியேட்டரே தெறிக்குது!.. தமிழ்நாட்டில மட்டும் இத்தனை கோடி கலெக்சனா?..
புஷ்பா 2 திரைப்படம் தமிழகத்தில் எவ்வளவு வசூலை ஈட்டியுள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
புஷ்பா 2 திரைப்படம்:
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பை கொடுத்தது. அதனால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய பொருள்செலவில் படக்குழுவினர் எடுத்து வந்தார்கள்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக 12000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
படத்தின் கதை:
செம்மரக் கடத்தலுக்கு ராஜாவாக இருக்கும் புஷ்பராஜ் சிறந்த பேரையும் புகழையும் பெறுகின்றார். அப்போது அவருக்கு ஆந்திர முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவரோ கடத்தல்காரருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று மறுத்து விடுகின்றார்.
இதனால் அந்த பதவியில் இருந்து முதல்வரை காலி செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றார் புஷ்பராஜ். இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் போலீஸ் அதிகாரியான பகத் பாஸில் எப்படியாவது புஷ்பராஜின் சாம்ராஜ்யத்தை உடைத்து அவரின் செம்மர கடத்தல் பிசினஸை தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். புஷ்பாவுக்கும் பகத் பாசிலுக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் முதல்வரை மாற்ற புஷ்பராஜ் போட்ட சபதம் இது இரண்டும் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் கதை.
ரசிகர்கள் விமர்சனம்:
3 மணி நேரம் 20 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த படம் மக்களுக்கு சற்றும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு சீனிலும் நடிகர் அல்லு அர்ஜுன் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் புஷ்பராஜின் மனைவியாக ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அட்டகாசமாக நடித்திருக்கின்றார் என்பது ரசிகர்களின் கருத்து. படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனால் நிச்சயம் 1000 கோடியை தாண்டும் என்று கூறி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு வசூல்:
அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் புஷ்பா திரைப்படம் உலக அளவில் 232 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக மாஸ் காட்டி வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.