அஜித் உடம்பு குறைச்சது படத்துக்காக இல்லையா?!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!....

By :  Murugan
Update: 2024-12-18 16:06 GMT

ajith

Ajithkumar: நடிகர் அஜித் அதிகமான பைக் ரேஸில் கலந்து கொண்டதால் சிலமுறை விபத்து ஏற்பட்டு அவரின் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு பலமுறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நிறைய ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டார் அஜித்.

இதன் காரணமாக அவரின் உடலில் எடை அடிக்கடி அதிகரிக்கும். கடந்த 20 வருடங்களாக இந்த பிரச்சனை அவருக்கு இருக்கிறது. அடிக்கடி முதுகுவலியால் அவதிப்படுவார். அந்த வலிகளை பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் நடித்து வருகிறார். அடிக்கடி அவரின் தோற்றம் மாறுவதற்கு காரணமும் அதுதான்.


வலிமை படத்தில் அவரின் தோற்றத்தை பார்த்துவிட்டு ‘பஜன்லால் சேட்டு போல இருக்கிறார்’ என யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் நக்கலடித்தார். அதேநேரம், திடீரென அஜித் தனது உடல் எடையை குறைத்தும் காட்டுவதுண்டு. விவேகம் படத்திற்காக தொப்பையை குறைத்து உடலை டைட் செய்து காட்டினார்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வெற்று உடம்புடன் சண்டையும் போட்டார். அதன்பின் அவரின் தோற்றம் மீண்டும் மாறியது. விடாமுயற்சி படத்தில் கொஞ்சம் குண்டான தோற்றத்தில்தான் நடித்து வந்தார். அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வெளியானபோதும் அப்படித்தான் இருந்தார்.


இந்நிலையில்தான், கடந்த சில நாட்களாக வெளியாகும் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. ஏனெனில், நடிக்கவந்த புதிதில் இருந்தது போல மாறியிருக்கிறார் அஜித். குறிப்பாக, விடாமுயற்சி படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் கருப்பு நிற கோட் சூட் அணிந்து மிகவும் ஸ்லிம்மாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இது அஜித்துக்கு சாத்தியம் எனில் இதை ஏன் அவர் பல வருடங்களாக செய்யவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் அஜித் உடம்பை குறைத்ததன் பின்னணியில் ஒரு செய்தி கசிந்திருக்கிறது. அஜித் துபாயில் உள்ள கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அவரின் அணிக்கு அவர்தான் கேபடன். 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் இந்த ரேஸ் நடக்கிறது.


இந்த ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் இவ்வளவுதான் உடல் எடை இருக்கவேண்டும் என விதிமுறை இருக்கிறது. ஏனெனில், அப்போதுதான் அந்த காரில் அமர்ந்து வசதியாக ஒட்ட முடியும். எனவே, அதற்காகவே அஜித் உடலை குறைத்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Tags:    

Similar News