ஆடியன்ஸ் கொடுக்கிற காசு இதுக்கே சரியாபோகும்!.. கேம் சேஞ்சருக்கு பில்டப் ஏத்திய எஸ்.ஜே சூர்யா..

By :  Ramya
Update: 2025-01-07 05:28 GMT

sj suriya

கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருடன் வலம் வரும் இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து இப்படத்தை நேரடி தெலுங்கு படமாக இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் ராம்சரனுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவில் இருக்கக்கூடிய பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி மட்டுமில்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை சிறப்பு காட்சிகளுக்கு விற்றுக் கொள்வதற்கும் ஆந்திராவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராம்சரண் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்ததாக சென்னையில் விழா நடத்துவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இது ஒரு புறம் இருக்க படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரும் தனித்தனியாக youtube சேனல்களுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அதில் படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ் ஜே சூர்யா சமீபத்தில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் அவர் படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த திரைப்படத்தை சாதாரணமாக செலவு செய்து எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 400 முதல் 500 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உண்டான வட்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் பட்ஜெட் எங்கேயோ சென்று விடுகின்றது. அதையெல்லாம் பொறுமையுடன் தில் ராஜ் சார் முயற்சி செய்து படத்தை தயாரித்து இருக்கின்றார். தயாரிப்பாளர் தில்ராஜ் அவர்களுக்கு சங்கர் சார் என்றால் மிகப் பிரியம்.

இந்த படத்தில் ஜருகண்டி ஜருகண்டி என்று ஒரு பாடல் இருக்கின்றது. அதை முன்பே ரிலீஸ் செய்து விட்டார்கள். அது என்னவென்றால் அந்த பாடலின் சில காட்சிகள் லீக் ஆகிவிட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அந்த பாடலை சும்மா லிரிக்ஸ் வீடியோ போல வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த பாடலை சமீபத்தில் தான் பார்த்தேன். ஆடியன்ஸ் கொடுக்கும் காசு அந்த பாட்டுக்கு சரியா போய்விடும். நான் உண்மையாக சொல்கின்றேன்.


அந்த படத்தை சமீபத்தில் தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த பாட்டுக்காகவே மீண்டும் படத்தை ஐ மேக்சில் சென்று பார்த்தேன். பிரபு தேவா மாஸ்டர் கொரியகிராப் வேற, அந்த பாடலில் ராம்சரனை பார்த்து பெண் ரசிகர்கள் உருகிப்போய் விடுவார்கள். அதே போல் நடிகை கியாரா அத்வானிக்கு கொடுத்த சம்பளத்துக்கு அந்த பாடலில் கவர்ச்சியாக நடனமாடி அனைத்து ஆண் ரசிகர்களையும் கிரங்கடிக்க வைப்பது உறுதி' என்று வார்த்தைக்கு வார்த்தை அந்த ஒரு பாடலை மட்டுமே புகழ்ந்து பேசி இருக்கின்றார் எஸ் ஜே சூர்யா. அந்த அளவுக்கு இந்த பாடலை செதுக்கி இருக்கின்றார் இயக்குனர் ஷங்கர்.

Tags:    

Similar News