விமான சாகச நிகழ்வுல யாரைக் கைது செஞ்சோம்..? சரத்குமார் காட்டம்

By :  Sankaran
Update: 2024-12-15 17:17 GMT

sarathkumar

அல்லு அர்ஜூன் கைதானதும், மோகன்பாபு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சை ஆனதும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள். இரண்டுமே பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் இருவருக்கும் ஆதரவாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

ஒரு விழாவுக்குக் கூட்டம் வருதுன்னா அது முதல்ல போலீஸ்சுக்குத் தெரிஞ்சிருக்கும். அன்பு சகோதரி தமிழிசை சொல்லிருக்காங்க. அதே தான் என்னோட நோக்கம். இவ்ளோ கூட்டம் வருதுன்னா தியேட்டர் ஓனர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வர்றாருன்னு சொல்லிருப்பாங்க.

வரும்போது போலீஸ் பந்தோபஸ்து கேட்டுருப்பாங்க. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்னு தெரிஞ்சா ஐயோ எங்களால பந்தோபஸ்து வழங்க முடியாது. நீங்க வராம இருக்குறது நல்லதுன்னு சொல்லிருக்க வேண்டும். வந்தபிறகு சொல்லும்போது அவர்தான் அதுக்குக் குற்றவாளின்னு கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கின்றேன்.

அங்கே விமானப்படையின் வீரதீர சாகசங்கள் நடக்கும்போது 5 பேர் செத்தாங்க. யாரைக் கைது பண்ணுனீங்க. ஏர் மார்ஷலையா? அதுக்கு நாம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் உரிய நேரத்தில் சொல்லவில்லையோ. நான் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது எனக்கு புரியவில்லை.

அதே போல மோகன்பாபு பத்திரிகை சகோதரர்களை அடித்தார் என்று சொல்கிறார்கள். எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். என்னன்னா அவருக்கும் அவரு மகனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. அதுல அவங்க மகனுக்கு வீட்டுக்குள்ள போகறதுக்கு உரிமை இருக்கு.


ஆனா கதவைத் தள்ளிக்கொண்டு அவர் போகும்போது பத்திரிகை சகோதரர்களும் உள்ளே போயிட்டீங்க. ஓகே. ஆனா மோகன்பாபுவுக்கு யாராவது வந்தால் எப்படி தெரியும்?

அதனால தன்னைப் பாதுகாப்பதற்கு அப்படி பண்ணிருக்கலாம். உள்ளே போனதே தப்பு தானே. வெளியே வந்து அப்படி பண்ணிருந்தா குற்றம் சொல்லிருக்கலாம். அதனால அங்கிருக்குற கமிஷனர் அவர்கள் பார்த்து நிதானமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தற்போது மோகன்பாபு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News