யாரு சொன்னா ஓடிடின்ன.. உறுதியா சொன்ன சங்கர்... அப்ப மீம்ஸ் கிரியேட்டருக்கு வேலை இருக்கு
இந்தியன் திரைப்படம்:
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை பெற்றவர் சங்கர். இவர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் மீண்டும் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் கேட்டதும் சம்மதித்த இளையராஜா... ஆனா கவிஞர் என்ன இப்படி இருக்காரு?
இந்தியன் 2 திரைப்படம்:
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், மனோபாலா, விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இந்தியன் தாத்தாவை சமூக வலைதள பக்கங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்கள் ட்ரோல் செய்து ஒரு வழி செய்து விட்டார்கள். படம் ரிலீஸ்-ஆன சமயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வந்ததால் நொந்து போய்விட்டார் இயக்குனர் சங்கர்.
இயக்குனர் சங்கர்:
இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்த போதே இந்தியன் 3 திரைப்படத்தையும் கையோடு எடுத்துவிட்டார் இயக்குனர் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்து இந்தியன் 3 திரைப்படத்தை ரிலீஸ் செய்வது குறித்து திட்டமிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் படக்குழுவினர்.
ஆனால் இரண்டாவது பாகம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் அதன் பிறகு மூன்றாவது பாகம் வெளியிடுவது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் இயக்குனர் சங்கர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இந்தியன் 3 ரிலீஸ்:
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். மேலும் இந்தியன் 2 திரைப்படம் இவ்வளவு பெரிய தோல்வியை சந்திக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பலரும் இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறி வந்த நிலையில் அதனை பொய் என்று மறுத்து இருக்கின்றார் இயக்குனர் சங்கர். இந்தியன் 3 திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கின்றார்.