வடிவேலு போட்ட போடு!.. பட்டுன்னு சரண்டரான சிங்கமுத்து.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு..
நடிகர் சிங்கமுத்து வடிவேல் குறித்து எந்த அவதூறு கருத்தும் இனி தெரிவிக்க மாட்டேன் என்று கூறியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. தனது காமெடி மூலமாக பலரையும் சிரிக்க வைத்த வடிவேலு ஒரு காலத்தில் மிகப்பிரபல நடிகராக வலம் வந்தவர். இவர் இல்லாத படங்களே இல்லை என்கின்ற அளவுக்கு காமெடியில் பட்டையை கிளப்பி வந்தார்.
அதன் பிறகு நடிகர் சங்கம் போட்ட தடை காரணமாக பல வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு தற்போது மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் நடிகர் சிங்கமுத்து.
இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வந்த நிலையில் பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். முன்னதாக இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில் வடிவேலு கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்டஈடு வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
அதில் நடிகர் வடிவேலு தெரிவித்திருந்ததாவது 'சிங்கமுத்து தன்னை பற்றி யூடியூபில் தர குறைவாக பேசுகின்றார். இதனால் தனக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நடிகர் சிங்கமுத்து இந்த அறிக்கைக்கு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வடிவேலு தொடர்பாக ஏற்கனவே பேசியிருந்த வீடியோக்களையும் யூட்யூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில் நீதிபதியின் உத்தரவின் பெயரில் நடிகர் சிங்கமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதமான தாக்கல் செய்திருந்தார். அவர் கூறியிருந்ததாவது நடிகர் வடிவேலுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க போவதில்லை. வடிவேலுக்கு எதிராக அவதூறான, தவறான எந்த தகவலையும் நான் வெளியிடமாட்டேன். வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ வெளியிட மாட்டேன் என்று சிங்கமுத்து தரப்பிலிருந்து உத்தரவாத மனுதாக்கள் செய்யப்பட்டிருக்கின்றது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பு பல youtube சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகர் வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இவை அனைத்தும் இணையதள பக்கத்தில் வைரலானது. மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் நடிகர் வடிவேலு இப்படிப்பட்ட குணமுடையவராய் என்று விமர்சித்து வந்தார்கள் இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.