இந்த விஷயத்தில் முதல் தமிழ் சினிமா!.. விடுதலை 2 படத்தில் இத கவனிச்சீங்களா?!...
Viduthalai 2: பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமால் இயக்குனராக களம் இறங்கியவர் வெற்றிமாறன். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர். நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் நல்ல நாவல்களை திரைப்படமாக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் அவரிடம் உண்டு.
அவர் இயக்கிய விசாரணை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய எல்லா படங்களுமே நாவலை அடிப்பையாக வைத்து உருவானவைத்தான். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் தனுஷுக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது. அதேபோல், தனுஷ் தயாரித்த விசாரணை படமும் தேசிய விருது பெற்றது. ஆடுகளம் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வெற்றிமாறன் வாங்கினார்.
எனவே, தமிழ் சினிமாவில் முக்கியமான, சிறந்த இயக்குனராக வெற்றிமாறன் இருக்கிறார். இவரின் ஒவ்வொரு படமும் பேசப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானாலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு ஏற்படும் அளவுக்கு அவரின் படங்கள் இருக்கிறது.
கடந்த 2 வருடங்களாக விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த விடுதலை 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெருமாள் வாத்தியார் என்பவரின் நிஜக்கதையை சினிமாவுக்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதிகமான வசனங்கள், விஜய் சேதுபதி எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார் என சில விமர்சனங்கள் வந்தாலும் பெரிய அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் இல்லை என்பதால் படம் தியேட்டரில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடக்காத ஒரு விஷயம் விடுதலை 2-வில் நடந்திருக்கிறது. இந்த படத்தில் ராஜீவ் மேனன், கவுதம் மேனன், சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வேல்ராஜ், மனோபாலா, தமிழ், பாவல் நவகீதன் என மொத்தம் 10 இயக்குனர்கள் விடுதலை 2-வில் நடித்திருக்கிறார்கள்.