வேகமாக 1000 கோடி வசூல் செய்த 6 திரைப்படங்கள்!.. பட்டைய கிளப்பும் புஷ்பா 2!...

By :  Murugan
Update: 2024-12-11 07:39 GMT

pushpa2

பேன் இண்டியா படங்கள்:

Pushpa 2: கடந்த சில வருடங்களாகவே பேன் இண்டியா என்கிற வார்த்தை பிரபலமாகி வருகிறது. அதாவது, ஒரு மொழியில் உருவாகும் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவர்கள். இந்தியா முழுவதும் பல ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் போது வசூலை அள்ளும் என்பதுதான் வியாபார கணக்கு.

ராஜமவுலி:

இதை துவங்கி வைத்தது ராஜமவுலிதான். அவர் இயக்கிய பாகுபலி படம் இப்படித்தான் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. அதைத்தொடர்ந்து வெளியான பாகுபலி 2 படமும் பேன் இண்டியா படமாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதன்பின் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் பேன் இண்டியா படமாக துவங்கியது.


பாகுபலி 2, கேஜிஎப் 2:

விஜயின் லியோ, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், ரஜினியின் ஜெயிலர், யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப், கேஜிஎப் 2, மற்றும் ஆர்.ஆர்.ஆர், கல்கி, சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பேன் இண்டியா படங்களாக வெளிவந்தது. இதில், சில படங்களை தவிர மற்ற எல்லாமே வசூலை அள்ளியது.

ஒருபக்கம், ஷாருக்கானின் படங்களும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக துவங்கிவிட்டது. அதேபோல், அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் பேன் இண்டியா படமாக வெளியாகி ஹிட் அடிக்க சமீபத்தில் புஷ்பா 2 படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.


புஷ்பா 2:

ஹிந்தியில் மட்டும் இப்படம் 5 நாட்களில் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. ஒரு தெலுங்கு படம் ஹிந்தியில் 5 நாட்களில் இவ்வளவு வசூலை பெற்றது சாதனையாக பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் 5வது நாளில் 930 கோடிக்கு வந்தது. இப்போது 6 நாட்கள் ஆகிவிட்டதால் கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், மிகவும் வேகமாக ஆயிரம் கோடியை தொட்ட இந்திய திரைப்படங்கள் பற்றி பார்ப்போம். இதில் முதலிடத்தில் இருப்பது புஷ்பாதான். 6 நாட்களில் இப்படம் 1000 கோடி வசூலை தொட்டிருக்கிறது. அடுத்து பாகுபலி 2 படம் 10 நாட்களில் 1000 கோடியை தொட்டது. ஆர்.ஆர்.ஆர் படம் 16 நாட்களில் 1000 கோடியை தொட்டது.

கேஜிஎப் 2 படம் 16 நாட்களில் 1000 கோடியை தொட்டது. அட்லி இயக்கத்ஹில் ஷாருக்கான் நடித்த ஜாவன் படம் 18 நாட்களில் 1000 கோடி வசூலை தொட்டது. அதேபோல், ஷாருக்கானின் நடிப்பில் வெளியான மற்றொரு படமான பதான் படம் 27 நாட்களில் 1000 கோடி வசூலை தொட்டது.

Tags:    

Similar News