ThugLife Review: தக் லைஃப் படத்தின் அமர் இவர்தானா? புஸ்ஸுனு போச்சுப்பா!..

By :  AKHILAN
Published On 2025-06-05 10:07 IST   |   Updated On 2025-06-05 10:07:00 IST

ThugLife: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் அமர் கேரக்டர் குறித்து நிலவிய சஸ்பென்ஸ் உடைந்து இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் தயாரான திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.

டைட்டில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரவி மோகன், துல்கர் சல்மான் வெளியேற உள்ளே வந்தார் சிலம்பரசன். அவருக்கான கதையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பரபரப்பாக ஷூட்டிங் நடந்து முடிந்து (ஜூன் 5) இன்று பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. முதலில் இப்படத்தின் டிரெய்லர் வெளியான போதே பல கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்தது. 

 

இதில் ரொம்பவே முக்கியமான கேள்வியாக பார்க்கப்பட்டது. டிரெய்லரில் அமர் என்ற கேரக்டர் பெயர் அடிப்பட்டது. அமர் தான் உயிரை காப்பாற்றியதாகவும், இனிமே நானும் அவனும் ஒன்னு என்பது போல கமலின் குரல் குழந்தை ஒருவரின் காட்சியுடன் தோன்றும்.

அதை தொடர்ந்து சிலம்பரசன் காட்சிகள் வரும். மேலும் கமல் உள்ளே இருந்து நான் பார்த்து கொள்வேன். அமரை பாத்துக்குவான் என சிம்பு மீது தோள் தொட்டு சொல்வதால் அவர்தான் அமரோ எனக் கேள்வி இருந்தது.

ஆனால் பின்னர் சிலம்பரசன் அமர் கேரக்டர் செய்யவில்லை. கமல்ஹாசன் தான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இள வயது கேரக்டர் தான் அமர் என பல பேச்சுகள் இருந்தது. ஆனால் தற்போது இதற்கெல்லாம் விடை கிடைத்து இருக்கிறது.

சிலம்பரசனுடன் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அசோக் செல்வன் தான் அமர் கேரக்டரில் நடித்து இருக்கிறார். அந்த சஸ்பென்ஸை காரணம் காட்டி தான் டிரெய்லரில் அவர் காட்சிகள் இணைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News