கவர்ச்சி நடிகையிடம் எடுபுடி வேலை பார்த்த விக்னேஷ் சிவன்?!.. தொக்கா மாட்டிக்கிட்டாரே!...
Vignesh shivan: தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தவர்தான் விக்னேஷ் சிவன். சிம்புவை வைத்து ‘போடா போடி’ என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில்தான் சரத்குமாரின் மகள் வரலட்சுமி அறிமுகமானார். இந்த படம் ஓடவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து அவர் இயக்கிய படம்தான் நானும் ரவுடிதான்.
விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் உருவான இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படம் உருவாகிக்கொண்டிருந்த போதே விக்கிக்கும், நயனுக்கும் இடையே ரொமான்ஸ் வந்து காதலாக மாறிவிட்டது. அதோடு, பட்ஜெட்டும் அதிகமாகி கொண்டே போனது. இதனால் கோபமடைந்த தனுஷ் இதற்கு மேல் நான் செலவு செய்ய மாட்டேன் என கைவிரித்துவிட்டார்.
எனவே, விக்னேஷ் சிவனுக்காக நயன் தனது சொந்த காசை போட்டு இந்த படத்தை முடிக்க உதவி செய்ததாக அப்போதே செய்திகள் வெளியானது. இந்த படம் வெளியாகி ஹிட் அடித்தாலும் தனுஷுக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் தனுஷ் விக்கி - நயன் ஜோடியிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
அதன்பின் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வதையே முழுநேர வேலையாக செய்து வந்தார் விக்னேஷ் சிவன். நயனுடன் அவரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் சேதுபதியை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை.
அதன்பின் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ஆனால், அஜித்துக்கு ஏதோ பிடிக்காமல் போக அது நடக்கவில்லை. 2 வருடங்களுக்கு முன்பு நயனை திருமணமும் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளுக்கு அப்பாவாகவும் மாறிவிட்டார்.
இப்போது லவ்டுடே பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஒருபக்கம், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் திருமண ஆவணப்படம் தொடர்பாக தனுஷை திட்டி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். நயன்தாராவை முன்னுறுத்தியே தனக்கான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் இவரை பற்றி யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சி பிஸ்மி கூறியிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் ஒன்றும் வெற்றிப்பட இயக்குனர் எல்லாம் இல்லை. அவரின் முதல் படமான போடா போடி படம் பிளாப். எனவே, அவருக்கு படங்களே கிடைக்காமல் வாழவே கஷ்டப்பட்டார். எந்த அளவுக்கு எனில் கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் தங்கியிருந்து அவருக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து கொடுத்தார். இதை நான் சொல்லவில்லை. சோனாவிடம் நீங்கள் ஒரு இண்டர்வியூ எடுத்தால் அவரே நிறைய கதைகள் சொல்வார்’ என சொல்லி இருக்கிறார்.